பெண்களுக்கு சமையலறை மட்டும்தான் சொந்தமா என்ன..?

பெண்களுக்கு சமையலறை மட்டும்தான் சொந்தமா என்ன..?

A.G.மௌரியா, துணைத் தலைவர், மக்கள் நீதி மய்யம்

“மக்கள் நீதி மய்யம் சார்பில் கோயம்புத்தூரில் வரும் 17ஆம் தேதி (சனிக்கிழமை) ‘மய்யம் மகளிர் சாதனையாளர்கள் விருது-2022’ வழங்கும் விழா நடைபெற உள்ளது.

சமையலறை மட்டுமே பெண்களுக்குச் சொந்தம் என்று சமூகம் விதித்த தடைகளைத் தகர்த்தெறிந்து, வெவ்வேறு துறைகளில் கொடிபறக்கச் செய்து, தேசத்தையே திரும்பிப் பார்க்கவைத்த நம் தமிழகப் பெண்களின் ஆற்றலையும், சாதனைகளையும் எண்ணி மக்கள் நீதி மய்யம் பெருமை கொள்கிறது.

இவ்வாறு பல்வேறு துறைகளில் சாதனை படைத்த மகளிரைப் பாராட்டி, மக்களிடம் அறிமுகப்படுத்தும் வகையில் அவர்களுக்கு ‘மய்யம் மகளிர் சாதனையாளர்கள் விருது-2022’ வழங்கும் நிகழ்ச்சி கோவை குனியமுத்தூர் பாலக்காடு பிரதான சாலையில் உள்ள என்.எஸ்.கே.கிராண்ட் ஸ்பேஸ் ஹோட்டல் வளாகத்தில் வரும் 17ஆம் தேதி மாலை 4 மணிக்கு நடைபெற உள்ளது.

இதில், மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவர் டாக்டர் கமல்ஹாசன், சாதனை மகளிருக்கு விருதுகளை வழங்கி கௌரவிக்கிறார்.

விழாவையொட்டி, கமல் கலைக்கூடம் அமைப்பின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற உள்ளன. தகைசால் தமிழ்ப் பெண்களைப் போற்றும் இந்த நிகழ்வுக்கு அனைத்து தரப்பு மக்களும் திரண்டு வருமாறு மக்கள் நீதி மய்யம் அழைக்கிறது. கூடுதல் விவரங்களுக்கு 9342974723 என்ற செல்போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.”