கே.அண்ணாமலை
அற்புத மனிதர்…
“அரசியலுக்கு அப்பாற்பட்டு அனைவராலும் உள்ளன்போடு விரும்பப்படும் ஒரு அற்புத மனிதராக திகழ்பவர் பாரத பிரதமர் நரேந்திர மோடி. தன்னலம் கருதாமல் பொது நலம் கருதி, நாட்டை உறுதியாக கட்டமைக்கும் தொலைநோக்கு பார்வையுடன், எந்தவிதமான சர்ச்சைக்கும் இடம் தராமல், மக்களுக்கான திட்டங்களை முன்னெடுக்கும் இவரின் வேகமான செயல்பாடுகள் பிரமிக்க வைக்கின்றன.
வாராது வந்த மாமணி…
தன்பெண்டு, தன்பிள்ளை சோறு வீடு சம்பாத்தியம் இவையுண்டு தானுண்டு என்போன், சின்னதொரு கடுகுபோல் உள்ளம் கொண்டோன், பயனற்ற சிறிய வீணன்… என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் இடித்துரைத்த பண்புகளாகிய சுயநலம் குடும்ப நலம் சொத்துக் குவிப்பு அதிகார அத்துமீறல்கள் போன்றவற்றை மட்டுமே,பார்த்துப் பழகிய தமிழக மக்களுக்கு… பாரதிதாசனாரின் கனவினில் விரிந்த… பரிசுத்தமான புகழுக்குரிய தலைவராக அடையாளம் காட்டப்பட்டவர் மோடி. தூய உள்ளம் அன்புள்ளம் பெரிய உள்ளம் தொல்லுலக மக்களெல்லாம் ஒன்றே என்னும் தாயுள்ளம் தனில் அன்றோ இன்பம் தங்கும்…என்ற பாவேந்தரின் வரிகளுக்கு கண் திறப்பு செய்ய, வாராது வந்த மாமணியாய் பரந்த மனமும் விரிந்த பண்பும் கொண்ட, மாமனிதர் பாரத பிரதமர் நரேந்திர மோடி.
சாமானிய மனிதன்…
ஒரு சாமானிய மனிதனாக, சமூக ஊடகங்களின் மூலம் மக்களுடன் நேரடித் தொடர்பை ஏற்படுத்தி வைத்திருக்கும், பாரத பிரதமர் மோடி, தன் தினசரி வாழ்வை உடல் மற்றும் மனதை பலப்படுத்தும், அமைதியை ஆத்ம சக்தியை அதிகரிக்கும் யோகாவுடன் தொடங்குகிறார். அரசியலுக்கு அப்பாற்பட்டு, எழுத்துத் துறையில் நரேந்திர மோடி மகிழ்ச்சி அடைகிறார். அவர் கவிதைகளும், பல புத்தகங்களும் எழுதியுள்ளார். வேகமான செயல்பாடுகள் கொண்ட தினசரி வாழ்வை, உடல் மற்றும் மனதை பலப்படுத்தி, அமைதியின் சக்தியை அளிக்கும் யோகாவுடன் தொடங்குகிறார் மோடி.
ஏழ்மையான ஆனால் பாசம் மிகுந்த குடும்பத்தில், 1950 செப்டம்பர் 17ஆம் தேதியன்று குஜராத்தில் சிறிய நகரில் பிறந்தவர் மோடி. சேமிக்க ஒரு ரூபாய்கூட இல்லாத மிகக் கடினமான குடும்ப சூழ்நிலையில், வாழ்விலே பட்ட கஷ்டங்கள் அவருக்கு சாமானிய மக்களின் தவிர்க்கக்கூடிய துன்பங்களையும் கற்றுக் கொடுத்தது. கடின உழைப்பின் அருமையை உணர்த்தியது.
மாநில அரசியலிலிருந்து தேசிய அரசியல்…
குஜராத் பல்கலைக்கழகத்தில் எம்.ஏ., அரசியல் அறிவியல் படித்திருக்கும் மோடி, மிக இளம் வயதிலேயே நாட்டுக்கும், மக்களுக்கும் சேவையாற்ற வேண்டும் என்ற ஆர்வத்துடன், தேச கட்டமைப்புக்கு அர்ப்பணித்துக் கொண்டுள்ள ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (ஆர்.எஸ்.எஸ்.) தேசிய அமைப்பில் இணைந்து பணியாற்றினார். பிறகு அரசியலில் ஈடுபாடு கொண்டு பாரதிய ஜனதா கட்சியில் மாநில மற்றும் தேசிய அளவில் இணைந்து பணியாற்றினார்.
மக்களின் தலைவர்…
மக்களின் பிரச்சினைகளைத் தீர்க்கமாக அறிந்து கொண்டும்,அதனை தீர்க்கும் வழி முறைகளைத் தெளிவாகத் திட்டமிட்டும், மக்கள் நலனை மேம்படுத்தவும் தீவிரமாகப் பாடுபடுவதால் நரேந்திர மோடி மாற்றில்லா மாணிக்கமாக மதிப்பிற்குரிய ‘மக்களின் தலைவராக’ ஒளி வீசுகிறார்.
மக்களுடன் தொடர்பில் இருப்பது என்ற அவருடைய வலுவான ‘தனிப்பட்ட தொடர்பு’ என்பது, இணையதளத்தில் அவருடைய தொடர்புகள் மூலம் வெளிப்படுகிறது. இந்தியாவில் தொழில்நுட்பம் சார்ந்த பெரிய தலைவராக அவர் கருதப்படுகிறார்.
திட்டங்கள் மற்றும் சேவைகள்…
மோடியின் நல்லாட்சியில், பங்கேற்புடன் கூடிய, வளர்ச்சி சார்ந்த மற்றும் ஊழலற்ற நிர்வாகத்தைத் தரும் வகையில் பல புதிய மாற்றங்கள் இருந்தன. அந்தியோதயா அல்லது திட்டங்கள் மற்றும் சேவைகள் கடைசி குடிமகன் வரை சென்று சேர்வதை உறுதி செய்வது என்ற இலக்கை எட்டுவதற்காக பெரிய அளவில் வேகமாக பிரதமர் பணியாற்றினார். ‘அனைவரும் ஒன்றிணைந்து, ஒன்றாக உயர்ந்து, அனைவரின் நம்பிக்கையைப் பெறுவோம்’ என்ற குறிக்கோளால் உத்வேகம் பெற்ற மோடி ஆட்சி நிர்வாகத்தில் கருத்தியல் அடிப்படையில் மாற்றத்தை ஏற்படுத்தினார்.
ஆயுஷ்மான் பாரத்…
மேன்மைக்குரிய மோடியின் ஆட்சியில், இந்தியா முன்னுதாரண நாடாக திகழ்கிறது. இப்போது உலகின் மிகப் பெரிய சுகாதாரத் திட்டமான, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைக் கொண்டதாக இந்தியா இருக்கிறது.
ஆரோக்கியம் குறித்த உலகின் மிகவும் பெருமைக்குரிய பத்திரிகையான Lancet, ஆயுஷ்மான் பாரத் திட்டத்தைப் பாராட்டியுள்ளது. இத்திட்டம், பெருமளவு மக்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதாக இந்தத் திட்டம் இருக்கிறது என்று அப்பத்திரிகையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைவருக்கும் ஆரோக்கிய வசதிகள் கிடைக்கச் செய்ய வேண்டும் என்பதற்கு முன்னுரிமை அளிக்கும் பிரதமர் மோடியின் முயற்சிகள் பற்றியும் அந்தப் பத்திரிகை பாராட்டியுள்ளது.
ஜன் தன் யோஜ்னா…
ஒவ்வொரு இந்தியருக்கும் வங்கிக் கணக்கு இருக்க வேண்டும் என்பதை நோக்கமாகக் கொண்டு பிரதமரின் ஜன் தன் யோஜ்னா என்ற திட்டத்தைக் கொண்டு வந்தார். இப்போது 35 கோடிக்கும் அதிகமான ஜன் தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. வங்கிக் கணக்கு இல்லாதவர்களுக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டிருப்பதுடன், அதிகாரம் கிடைக்கச் செய்வதற்கான வாயில்கள் ஏழைகளுக்குத் திறக்கப்பட்டுள்ளன.
ஜன் சுரக்சா…
சமூகத்தில் அதிக சிரமங்களை எதிர்கொள்ளும் மக்களுக்குக் காப்பீட்டு வசதி கிடைக்க வேண்டும் என்பதற்காக ஜன் சுரக்சா திட்டத்துக்கு மோடி முக்கியத்துவம் அளித்தார். மூன்று அம்சங்களைக் கொண்ட ஒரே திட்டம் என்ற JAM (ஜன் தன் – ஆதார் – மொபைல்) திட்டத்தின் மூலம் இடைத்தரகர்கள் ஒழிக்கப்பட்டு, தொழில்நுட்பத்தால் முன்னெடுக்கப்பட்ட வெளிப்படைத்தன்மை, வேகம் ஆகியவை உறுதி செய்யப்பட்டுள்ளன.
உஜ்வாலா…
2016ல் தொடங்கப்பட்ட பிரதமரின் உஜ்வாலா திட்டத்தின் கீழ், ஏழைகளுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்படுகிறது. 7 கோடி பயனாளிகளுக்கு, பெரும்பாலானவர்களாக பெண்களுக்கு, புகையில்லா சமையலறை வசதி அளிக்கும் வகையில், பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் திட்டமாக இது அமைந்தது.
மின்சார வசதி…
சுதந்திரம் பெற்ற நாள் முதல் சமீப காலம் வரை, 70 ஆண்டுகளாகியும் மின்சார வசதி இல்லாதிருந்த 18,000 கிராமங்களுக்கு மின்சார வசதி அளிக்கப்பட்டது.
அனைவருக்கும் வீடு…
2022க்குள் ‘அனைவருக்கும் வீடு’ என்ற பிரதமரின் லட்சியத்தை நிறைவேற்றும் வகையில், 2014 முதல் 2019 வரையில் 1.25 கோடி வீடுகள் கட்டப்பட்டுள்ளன. இந்தத் திட்டத்தின் பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றன.
கிஷான் சம்மான் நிதி…
விவசாயத் துறையில் பிரதமரின் கிஷான் சம்மான் நிதி என்ற பெயரில் விவசாயிகளுக்கான ஊக்கத்தொகை திட்டம் மற்றும் பிரதமர் மோடி தலைமையிலான இரண்டாவது ஆட்சிக் காலத்தில், முன்பிருந்த 5 ஏக்கர் என்ற உச்சவரம்பை நீக்க முடிவு செய்யப்பட்டது.
ஜலசக்தி…
இதையடுத்து விவசாயிகள் நலனுக்காக மத்திய அரசு ஆண்டுக்கு ஏறத்தாழ ரூ.87,000 கோடி செலவிடுகிறது. மண்வள அட்டை, சந்தைப்படுத்தலை செம்மையாக்க E-NAM வசதி, பாசனத் திட்டத்தில் புதிய கவனம் செலுத்துதல் போன்ற வகைகளில் தடம் பதிக்கும் முயற்சிகளிலும் மோடி கவனம் செலுத்துகிறார். நீர்வளம் தொடர்பான அனைத்து விஷயங்களையும் கையாள்வதற்கு ஜலசக்தி அமைச்சகம் என்ற புதிய அமைச்சகத்தை உருவாக்கியுள்ளார்.
தூய்மை இந்தியா இயக்கம்…
2014 அக்டோபர் 2ஆம் தேதி மகாத்மா காந்தி பிறந்த நாளன்று,நாடு முழுக்க தூய்மையை ஏற்படுத்தும் வகையில் ‘தூய்மை இந்தியா இயக்கத்தை’ பிரதமர் தொடங்கி வைத்தார். அதன் அளவும் தாக்கமும் வரலாற்றுச் சிறப்புமிக்கவை. தூய்மை இந்தியா இயக்கத்துக்கு உலக சுகாதார நிறுவனம் பாராட்டு தெரிவித்துள்ளது. இதனால் 3 லட்சம் உயிர்கள் காப்பாற்றப்படும் என்று உலக சுகாதார நிறுவனம் கூறியுள்ளது.
2014ல் 38 சதவீதமாக இருந்த கழிப்பறை வசதி, இப்போது 99 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் திறந்தவெளிக் கழிப்பறை இல்லாத பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. கங்கையைத் தூய்மைப்படுத்துவதற்குத் தேவையான பல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.
உடான் திட்டம்…
அதுமட்டுமா நெடுஞ்சாலை, ரயில்வே,ஐ-வழிகள் மற்றும் நீர்வழிகள் என எதுவாக இருந்தாலும் புதிய தலைமுறை கட்டமைப்பு வசதிகளை உருவாக்கும் வகையில் மத்திய அரசு முயற்சிகள் எடுத்து வருகிறது. உடான் (UDAN) திட்டத்தின் மூலம் மக்களுக்கு விமானப் போக்குவரத்து வசதி ஏற்படுத்தி, நகரங்களுடன் இணைப்பு வசதி மேம்படுத்தப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா…
இந்தியாவை சர்வதேச உற்பத்தி மையமாக மாற்றும் முயற்சியாக ‘மேக் இன் இந்தியா’ திட்டம் மூலம் தொழில் செய்வதில் எளிமையான சூழல் என்ற நிலையை உருவாக்குவதில் இந்தியா மேம்பட்டிருக்கிறது. நம் வரலாற்றில் உள்ள தவறுகள் களையப்பட்டு திருத்தப்படுகிறது, மேலும் கலாச்சாரத்துக்கு கூடுதல் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. உலகின் மிகப்பெரிய சிலையான, சர்தார் பட்டேலுக்கு பெருமை சேர்க்கும் வகையில் ஒற்றுமைக்கான சிலை இந்தியாவில் அமைக்கப்பட்டது. விவசாயிகளின் உபகரணங்கள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து எடுக்கப்பட்ட மண் ஆகியவற்றை சேர்த்து சிறப்பு இயக்கத்தின் மூலம் இந்தச் சிலை அமைக்கப்பட்டது. ‘ஒன்றுபட்ட பாரதம், ஒப்பற்ற பாரதம்’ என்ற கோட்பாட்டை வலியுறுத்தும் வகையில் இந்தச் சிலை உருவாக்கப்பட்டுள்ளது.
வெளிநாட்டு கொள்கை முயற்சிகள்…
பாரதப்பிரதமர் மோடியின் வெளிநாட்டுக் கொள்கை முயற்சிகள், உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் உண்மையான திறமை மற்றும் பங்களிப்பை உலகறியச் செய்தன.முதலாவது ஆட்சிக் காலத்தை சார்க் நாடுகளின் அனைத்து தலைவர்களின் முன்னிலையில் பிரதமர் தொடங்கினார். இரண்டாவது ஆட்சிக் காலத்தின் தொடக்கத்துக்கு BIMSTEC தலைவர்களுக்கு அவர் அழைப்பு விடுத்திருந்தார். ஐ.நா. பொதுச் சபையில் அவர் ஆற்றிய உரை அகிலம் முழுவதும் பெருத்த வரவேற்பை, பாராட்டுகளைப் பெற்றது.
17 ஆண்டுகளுக்குப் பிறகு நேபாளத்துக்கு இருதரப்பு உறவுகளுக்காக பயணம் மேற்கொண்டது, 28 ஆண்டுகளுக்குப் பிறகு ஆஸ்திரேலியாவுக்கும், 31 ஆண்டுகளுக்குப் பிறகு பிஜி தீவுகளுக்கும், 34 ஆண்டுகளுக்குப் பிறகு ஐக்கிய அமீரகம் மற்றும் செஷல்ஸ் தீவுகளுக்குச் சென்ற முதலாவது இந்தியப் பிரதமராக மோடி நாட்டை உலக அரங்கில் உயர்த்திப் பிடித்தார். மோடி பதவியேற்ற பிறகு ஐ.நா., பிரிக்ஸ், சார்க் மற்றும் ஜி-20 உச்சி மாநாடுகளில் உலகப் பொருளாதார மற்றும் அரசியல் விஷயங்களில் இந்தியாவின் கருத்துகளுக்குப் பரவலான வரவேற்பு கிடைத்தது.
சர்வதேச யோகா தினம்…
‘சர்வதேச யோகா தினம்’ கடைபிடிப்பது தொடர்பாக நரேந்திர மோடியின் உறுதியான அழைப்புக்கு ஐ.நா.வில் நல்ல வரவேற்பு கிடைத்தது. முதன்முதலாக உலகெங்கும் 177 நாடுகள் ஒன்று சேர்ந்து ஜூன் 21ஆம் தேதியை ‘ஐ.நா.வில் சர்வதேச யோகா தினமாக’ கடைபிடிக்கும் தீர்மானத்தை நிறைவேற்றின.
உயரிய விருதுகள்…
சவுதி அரேபியா அரசர் அப்துல் அஜீஸ் சார்பில் பொது மக்களுக்கு வழங்கப்படும் உயரிய கவுரவ விருது உள்ளிட்ட பல விருதுகள் பிரதமர் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளன. ரஷியா (The Order of the Holy Apostle Andrew the First), பாலஸ்தீனம் (Grand Collar of the State of Palestine), ஆப்கானிஸ்தான் (Amir Amanullah Khan Award), ஐக்கிய அமீரகம் (Zayed Medal) மற்றும் மாலத்தீவுகள் (Rule of Nishan Izzuddeen) ஆகிய நாடுகளின் உயர் விருதுகளும் மோடிக்கு வழங்கப்பட்டுள்ளன. அமைதி மற்றும் வளர்ச்சிக்கான பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில், 2018ஆம் ஆண்டில் பிரதமருக்கு, பெருமைக்குரிய சியோல் அமைதிப் பரிசு வழங்கப்பட்டது.
இன்னும் சுற்றுச் சூழல், நிர்வாகச் சீரமைப்பு, நிதி மேலாண்மை,நாட்டின் பாதுகாப்பு ஆகிய விஷயங்களில் இந்தியாவின் வியத்தகு முன்னேற்றம் சாதனைகளுக்கு அப்பாற்பட்ட செயலாக்கம்.
நாட்டையும் நாட்டின் மக்களையும் குறித்து மட்டுமே சிந்திக்கும் ஒரு மாமனிதரை, மனிதருள் புனிதரை பெற்றிருப்பது பெரும் பேறு. பாரதப் பிரத்மர் மோடியின் பிறந்த நாளில் அவர் நீண்ட நெடுங்காலம் வாழ்ந்து மக்கள் தொண்டாற்ற இறைவனை இறைஞ்சி நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்வோம்.”