இன்று (1.10.2022) இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் கேரள மாநில மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை திருவனந்தபுரம் விமான நிலையத்தில், கேரள மாநில வருவாய் மற்றும் வீட்டுவசதி துறை அமைச்சர் கே.ராஜன், கேரள மாநில உணவு,உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜி.ஆர்.அணில் ஆகியோர் வரவேற்றனர். உடன் தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் எண்ம சேவைகள் துறை அமைச்சர் த.மனோ தங்கராஜ், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் இரா.முத்தரசன் ஆகியோர் உள்ளனர்.