அதிகரித்தது விமான பயணிகளின் எண்ணிக்கை!

அதிகரித்தது விமான பயணிகளின் எண்ணிக்கை!

இந்திய விமான நிலையங்களின் ஆணையம் (Airports Authority Of India), சென்னை விமான நிலையத்தில் செப்டம்பர் மாதம் பயணித்த விமான பயணிகளின் எண்ணிக்கை மற்றும் விமான போக்குவரத்து குறித்த விபரங்களை தன் டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.

சென்னை விமான நிலையத்தில், செப்டம்பர் மாதத்தில் மட்டும் 10,876 விமான போக்குவரத்து வாயிலாக 14.97 லட்சம் பயணிகள் பயணித்துள்ளனர்.

2021-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 7599 விமான போக்குவரத்து வாயிலாக 7.93 லட்சம் பயணிகளே பயணித்திருந்தனர்.

இதன்படி, விமான போக்குவரத்தின் எண்ணிக்கை 43 சதவிகிதமும், பயணிகளின் எண்ணிக்கை 89 சதவிகிதமும் உயர்ந்துள்ள அதேநேரத்தில், கடந்த ஆகஸ்ட் மாதத்தோடு ஒப்பிடுகையில் விமான போக்குவரத்தின் எண்ணிக்கை 44 குறைந்துள்ளபோதிலும், பயணிகளின் எண்ணிக்கை 29 ஆயிரம் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.