திருமலா திருப்பதி தேவஸ்தானம் அறிவிப்பு
திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க புரட்டாசி மாதத்தின் பெரும்பாலான நாட்களில் குறிப்பாக சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில் பக்தர்கள் 6 கி.மீ. தூரம் வரை நீண்ட வரிசையில் காத்திருந்ததோடு, அவர்கள் 2 நாட்கள் வரை வரிசையிலேயே சென்று ஏழுமலையானை தரிசித்தனர்.
கடந்த 10-ந் தேதி திருப்பதி ஏழுமலையானை 83,223 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இவர்களில் 36,658 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். உண்டியல் மூலம் பக்தர்கள் 4.73 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சுவாமியை தரிசனம் செய்ய 35 மணி நேரம் வரை பக்தர்கள் தர்ம தரிசன வரிசையில் காத்திருந்தனர்.
11-ந் தேதி திருப்பதி ஏழுமலையானை 77,956 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர்.இவர்களில் 33672 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர்.உண்டியல் மூலம் பக்தர்கள் 3.88 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சுவாமியை தரிசனம் செய்ய 24 மணி நேரம் வரை பக்தர்கள் தர்ம தரிசன வரிசையில் காத்திருந்தனர்.
12-ந் தேதி திருப்பதி ஏழுமலையானை 79,370 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இவர்களில் 39199 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். உண்டியல் மூலம் பக்தர்கள் ரூ 4.25 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.சுவாமியை தரிசனம் செய்ய 24 மணி நேரம் வரை பக்தர்கள் தர்ம தரிசன வரிசையில் காத்திருந்தனர்.
13-ந் தேதி திருப்பதி ஏழுமலையானை 72,216 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இவர்களில் 32,338 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். உண்டியல் மூலம் பக்தர்கள் ரூ 5.65 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சுவாமியை தரிசனம் செய்ய 30 மணி நேரம் வரை பக்தர்கள் தர்ம தரிசன வரிசையில் காத்திருந்தனர்.
14-ந் தேதி திருப்பதி ஏழுமலையானை 68,675 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இவர்களில் 32,533 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். உண்டியல் மூலம் பக்தர்கள் ரூ 3.82 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சுவாமியை தரிசனம் செய்ய 18 மணி நேரம் வரை பக்தர்கள் தர்ம தரிசன வரிசையில் காத்திருந்தனர்.
15-ந் தேதி திருப்பதி ஏழுமலையானை 81,535 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இவர்களில் 37,357 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். உண்டியல் மூலம் பக்தர்கள் ரூ 4.08 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சுவாமியை தரிசனம் செய்ய 10 மணி நேரம் வரை பக்தர்கள் தர்ம தரிசன வரிசையில் காத்திருந்தனர்.
16-ந் தேதி திருப்பதி ஏழுமலையானை 84,794 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இவர்களில் 35,560 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். உண்டியல் மூலம் பக்தர்கள் ரூ 4.67 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர். சுவாமியை தரிசனம் செய்ய 15 மணி நேரம் வரை பக்தர்கள் தர்ம தரிசன வரிசையில் காத்திருந்தனர்.
கடந்த ஒரு வாரத்தில் (10.10.2022 – 16.10.2022) மட்டும் சராசரியாக திருப்பதி ஏழுமலையானை 78,252 பக்தர்கள் தரிசனம் செய்துள்ளனர். இவர்களில் 35,331 பேர் தலைமுடி காணிக்கை செலுத்தியுள்ளனர். உண்டியல் மூலம் பக்தர்கள் ரூ 4.44 கோடி காணிக்கையாக செலுத்தியுள்ளனர்.
மேலும், தீபத் திருநாளான தீபாவளியையொட்டி, திருமலை – திருப்பதி கோயிலில் அக்டோபர் 24-ஆம் தேதி ‘தீபாவளி ஆஸ்தானம்’ நடைபெறவுள்ளது.
அன்றைய தினம் கோயில் பூசாரிகளின் வேத பாராயணங்களுக்கு இடையே ரூபாய் நாணயம் மற்றும் பிரத்யேக ஹாரத்தி உள்ளிட்ட சிறப்பு பூஜைகளும், காலை 7 மணி முதல் 9 மணி வரை ஆஸ்தானமும் செய்யப்படும்.
சஹஸ்ர தீபாலங்கார சேவை மாலை 5 மணி முதல் 7 மணி வரை அனுசரிக்கப்படும். அதேவேளையில் கல்யாணோத்ஸவம், ஊஞ்சல் சேவை, ஆர்ஜித பிரம்மோத்ஸவம் ஆகியவற்றை திருமலா திருப்பதி தேவஸ்தானம் ரத்து செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.