அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள மல்லிகார்ஜுன் கார்கேவை, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி டெல்லியில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.
இந்நிகழ்வில் அகில இந்திய காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ், தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சு.திருநாவுக்கரசர் எம்.பி, பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் ஆகியோர் தங்கள் வாழ்த்துகளை தெரிவித்தனர்.