கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 7ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...

கிராம உதவியாளர் பணியிடங்களுக்கு 7ந் தேதி வரை விண்ணப்பிக்கலாம்...

சென்னை மாவட்ட வருவாய் அலகில் வருவாய் வட்டம் வாரியாக காலியாக உள்ள கிராம உதவியாளர் பணியிடங்களுக்கான இணைய வழி விண்ணப்பங்கள் 7.11.2022 வரை விண்ணப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட வருவாய் அலகில் 9 வருவாய் வட்டங்களில் காலியாக உள்ள 12 கிராம உதவியாளர் பணியிடங்கள் Special Time Scales of Pay Matrix Level 6 (Minimum Rs.11,100/- Maximum Rs.35,100/-) என்ற அடிப்படையில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் நேரடி விண்ணப்பங்கள் மூலம் நியமனம் செய்ய தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பம் பெற்றிட கடைசி தேதி 7.11.2022 ஆகும்.மனுதாரர் விண்ணப்பிக்க வயது வரம்பு 30.09.2022 அன்று 21 வயதினை பூர்த்தி செய்திருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் அதிகபட்சமாக 32 வயது வரையும், பிற்படுத்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் (முஸ்லிம்), மிகவும் பிற்படுத்தப்பட்டோர், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் அதிகபட்சமாக 37 வயது வரையும் இருத்தல் வேண்டும்.

மனுதாரர் விண்ணப்பிக்கும் வட்டத்தில் நிரந்தரமாக வசிப்பவராக இருத்தல் வேண்டும்.

விண்ணப்பதாரரின் குறைந்தபட்ச கல்வித்தகுதியாக ஐந்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

வரப்பெறும் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து எழுத்து தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலமாக மனுதாரர் தேர்வு செய்யப்படுவார்.

கிராம உதவியாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் தமிழக அரசின் இணையதளம் https://www.tn.gov.in, வருவாய் நிர்வாகத் துறையின் இணையதளம் https://cra.tn.gov.in மற்றும் சென்னை மாவட்ட அதிகாரப்பூர்வமான இணையதளம் https://chennai.nic.in மூலம் 7.11.2022 வரை விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.