தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர்...

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவையை தொடங்கி வைத்த பிரதமர்...

சென்னை – மைசூரு இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை இன்று பெங்களூருவில் கொடியசைத்து தொடங்கி வைத்தார் பிரதமர் நரேந்திர மோடி.

வந்தே பாரத் ரயில் பல நவீன தொழில் நுட்பங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

இந்த ரயிலானது மணிக்கு 160 கி.மீ. வேகம் வரை செல்லும். மற்ற எக்ஸ்பிரஸ் ரயில்களோ அதிகபட்சம் 130 கி.மீ. வேகம் வரைதான் செல்லும்.

சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில் என்றால் மணிக்கு 140 கி.மீ. வேகத்தில் செல்லும். ஆனாலும் சூப்பர் பாஸ்ட் எக்ஸ்பிரஸ் ரயில்களை 90 முதல் 110 கி.மீ. வேகத்துக்கு மேல் இயக்குவதில்லை.

வந்தே பாரத் ரயிலை 130 கி.மீ. வேகம் வரை இயக்க அனுமதி உண்டு.

சென்னை – மைசூரு இடையே காட்பாடி,பெங்களூரு என இரண்டு ஸ்டேஷனில் மட்டுமே நிற்பதால் பயண நேரம் மிககுறைவு.

சென்னையிலிருந்து 6.25 மணி நேரத்தில் மைசூருக்கு சென்று விடலாம்.

தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் என்ற பெருமையை பெற்றுள்ள இது,16 பெட்டிகளைக் கொண்டுள்ளது.

சென்னை சென்ட்ரல் – மைசூரு – சென்னை சென்ட்ரல் இடையே இன்று முதல் புதன்கிழமை தவிர மற்ற 6 நாட்களும் இரு முனைகளிலிருந்தும் இயக்கப்படும்.