கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்

கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகள்! அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் தகவல்

அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகத்தின் சார்பில் தொலைதூர பயணிகளின் வசதிக்காக கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு சிறப்பு பேருந்துகளை இயக்க இருப்பதாக போக்குவரத்துத்துறை அறிவித்துள்ளது.

தமிழகத்தின் மிகவும் பிரசித்தி பெற்ற கார்த்திகை தீப திருநாளை முன்னிட்டு தொலைதூர பயணிகள் திருவண்ணாமலைக்கு சென்று வர ஏதுவாக நாகர்கோவில், திருநெல்வேலி, தூத்துக்குடி, செங்கோட்டை, மதுரை மற்றும் கோயம்புத்தூர் ஆகிய ஊர்களிலிருந்து அரசு விரைவுப் போக்குவரத்துக் கழகம் மூலம் அதிநவீன சொகுசு பேருந்துகள், இருக்கை மற்றும் படுக்கை வசதி கொண்ட குளிர்சாதன பேருந்துகளை டிசம்பர் 5ந் தேதி மற்றும் டிசம்பர் 6ந் தேதி ஆகிய இரண்டு நாட்களும் இயக்கப்பட உள்ளது.

இச்சிறப்பு பேருந்துகளுக்கு www.tnstc.in, மற்றும் tnstc official app, ஆகிய இணையதளங்களின் மூலமாக இருபுறமும் முன்பதிவு செய்து பயணிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

மேலும், பேருந்து இயக்கம் குறித்த தகவல்களுக்கு மதுரை 94450 14426, திருநெல்வேலி 94450 14428, நாகர்கோவில் 94450 14432, தூத்துக்குடி 94450 14430, கோயம்புத்தூர் 94450 14435, தலைமையகம் 94450 14435, 94450 14424 மற்றும் 94450 14416 ஆகிய எண்களை தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.

எனவே, திருவண்ணாமலை செல்லும் பக்தர்கள் மேற்படி பேருந்து வசதியினை பயன்படுத்திக்கொள்ள இதன் மூலம் கேட்டுக்கொள்ளப் படுகிறார்கள்.