கடன் பத்திரங்கள் மூலம் ரூ.10,000 கோடி திரட்டியது எஸ்.பி.ஐ.

முதல்முறையாக உள்கட்டமைப்பு கடன் பத்திரங்களை வெளியிட்டுள்ளது குறித்து, இந்தியாவின் மிகப்பெரிய வங்கியான பாரத ஸ்டேட் பேங்க் (எஸ்.பி.ஐ) செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த செய்திக்குறிப்பில் எஸ்.பி.ஐ தெரிவித்திருப்பதாவது,

ஒதுக்கீடு செய்ததைப் போல 3.27 மடங்கு கடன் பத்திரங்களுக்கான விண்ணப்பங்கள் குவிந்ததாகவும், 143 ஏலதாரர்கள் ரூ.16,366 கோடி மதிப்பிலான கடன் பத்திரங்களுக்கு விண்ணப்பித்து இருந்தனர் என்றும், இந்த கடன் பத்திரங்களை வெளியிட்டதன் மூலம் ரூ.10,000 கோடியை வங்கித் திரட்டியுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த நிதி வங்கியின் உள்கட்டமைப்பு மற்றும் குறைந்த விலை வீடுகள் பிரிவுக்கான நீண்டகால நிதி ஆதார தேவைகளுக்காக பயன்படுத்தப்படும் என்றும் எஸ்.பி.ஐ வெளியிட்டுள்ள அந்த செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.