உயர்கிறது கார்களின் விலை!

இந்தியாவின் பிரபல கார் தயாரிப்பு நிறுவனங்களான மாருதி சுசூகியும், டாடா மோட்டார்ஸும் அடுத்த மாதம் முதல் தங்களது கார்களின் விலையை உயர்த்துவதாக அறிவித்துள்ள நிலையில், ஏ4, ஏ6, ஏ8 எல், க்யூ3, க்யூ5, க்யூ7, க்யூ8, எஸ் 5 ஸ்போர்ட் பேக், ஆர்எஸ் 5 ஸ்போர்ட் பேக், ஆர்எஸ்க்யூ 8 ஆகிய பெட்ரோலில் இயங்கக் கூடிய கார்களை விற்பனை செய்துவரும் பிரபல சொகுசு கார் தயாரிப்பு நிறுவனமான ‘ஆடி’யும் தனது கார்களின் விலையை அடுத்த மாதத்தில் இருந்து அதிகரிக்க இருப்பதாக அந்த நிறுவனத்தின் இந்தியப் பிரிவு தலைவர் பல்வீர் சிங் தில்லான் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது,

விநியோகம் மற்றும் செயல்பாட்டு செலவினங்கள் அதிகரித்துள்ளதாலும், நிறுவனம் மற்றும் ஆடி கார்களின் விற்பனையாளர்கள் இழப்பைச் சந்திப்பதைத் தடுக்கவும், நீடித்து நிலைத்திருப்பதை உறுதி செய்யவும் இந்தியாவில் விற்பனையாகும் ஆடி கார்களின் விலையை 1.7 சதவிகிதம் வரை உயர்த்த வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், வரும் ஜனவரி மாதம் 1ந் தேதி முதல் இந்த விலை உயர்வு அமலுக்கு வரும் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.