எல்.ஐ.சி. அறிமுகம்
இந்திய ஆயுள் காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி (LIC) தன்னுடைய பாலிசிதாரர்களுக்காக வாட்ஸ் அப் சேவையினை அறிமுகம் செய்துள்ளது.
கோடிக்கணக்கான பாலிசிதாரர்களை கொண்டுள்ள எல்.ஐ.சி. நிறுவனம் தங்களுடைய பாலிசிதாரர்களுக்காக பல்வேறு வசதிகளை ஏற்படுத்திக் கொடுத்து வருகிறது.
அந்தவகையில், தங்களுடைய பாலிசிதாரர்களுக்கான சேவைகள் எளிதாக கிடைக்கவும், ப்ரீமியம் தொகை, பாலிசி நிலவரம் உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களை வாட்ஸ் அப் மூலமாக அறிந்து கொள்வதற்காகவுமே இந்த வாட்ஸ் அப் சேவையினை எல்.ஐ.சி அறிமுகம் செய்துள்ளது.
எல்.ஐ.சி. பாலிசிதாரர்கள் இனி ஏஜெண்டுகளின் வருகைக்காக காத்திருக்க தேவையில்லை என்பதோடு, ஒவ்வொரு சிறிய வேலைகளுக்காகவும் அலுவலகங்களுக்கு செல்ல வேண்டியதும் இருக்காது. மேலும், பழைய மற்றும் புதிய பாலிசி விவரங்கள், பிரீமியம், போனஸ் மற்றும் பிற சேவைகள் பற்றிய முழுமையான தகவல்களை வழங்குவதற்காகவே LIC WhatsApp சேவையை அறிமுகம் செய்து வைத்துள்ளது.
பாலிசிதாரர்கள் 89768 62090 என்ற வாட்ஸ்அப் எண்ணுக்கு Hi என்று மெசேஜ் செய்து பிரீமியம் நிலுவைத் தொகை, போனஸ் குறித்த தகவல், பாலிசி நிலவரம், கடன் தகுதி விவரம், கடன் திருப்பிச் செலுத்தும் விவரம், கடன் வட்டி நிலுவை, ப்ரீமியம் செலுத்திய சான்று, யுலிப் ஸ்டேட்மென்ட், எல்ஐசி சேவை லிங்க், சேவை விருப்பங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் இனி இருந்த இடத்தில் இருந்தே பெற்று பயனடையலாம்.