2022-ல் குஜராத்தில் நடைப்பெற்ற சட்டப்பேரவை தேர்தலில் பாஜக வரலாறு காணாத வெற்றியை பெற்றது. இந்த வெற்றிக்கு பிரதமர் மோடி தான் காரணம் என்று வெளிநாட்டு ஊடகங்கள் பாராட்டுக்களை தெரிவிக்கின்றனர்.
ஊடகங்களின் பாராட்டுக்களை தெரிவிக்கும் வகையில், இங்கிலாந்தில் உள்ள முதன்மையான ஊடகமான ‘பிபிசி’ வெளியிட்டுள்ள இதழில், குஜராத்தின் முதல்வராக இருந்த பிரதமர் மோடி கடந்த 2014ல் இந்தியாவின் பிரதமராக பதிவியேற்றார். இருப்பினும் அவரது செல்வாக்கு எப்பொழுதும் குறைந்ததில்லை என்பதற்கு எடுத்துகாட்டாக குஜராத் தேர்ததலில் பாஜக தொடர்ந்து வெற்றி(யை தன்வசமாக வைத்திருக்கிறது) பெற்று வருகிறது… “பிரதமர் மோடி தனித்துவமானவர்” என்று கூறப்பட்டிருந்தது.
கத்தார் அரசு ஊடகமான ‘அல்ஜசீரா’ வெளியிட்டுள்ள இதழில் “பிரதமர் மோடியின் பாஜக கட்சி குஜராத்தில் வரலாறு காணாத வெற்றியை பெற்றிருக்கிறது. குஜராத்தில் 27 ஆண்டுகள் ஆட்சி செய்யும் அந்த கட்சி மீண்டும் வெற்றிவாகையை சூடியிருக்கிறது. இந்த வெற்றி 2024 தேர்தலில் எதிரொலிக்கக் கூடும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
சிங்கப்பூரின் முன்னனி நாளிதழான ‘தி ஸ்ரேட்ஸ் டைம்ஸ்’ ஆங்கில இதழில் “பிரதமர் நரேந்திர மோடியின் பாஜக கட்சி, குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் அபார வெற்றி பெற்றிருக்கிறது. இந்த வெற்றி அந்த கட்சிக்கு ஊக்க சக்தியாக அமையும்” தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முதன்மையான ஊடகமாக திகழும் ‘சிஎன்என்’ வெளியிட்டுள்ள பத்திரிக்கையில் “குஜராத் சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜக வரலாறு காணாத வெற்றி பெற்றிருக்கிறது. பிரதமர் மோடி மீது நிறைய விமர்சனங்கள் வைக்கப்பட்டாலும், அவரது செல்வாக்கு தொடர்ந்து அதிகரிக்கிறது” என்று பாராட்டப்பட்டுள்ளது.