கூடவே கூடாது! - ஒரே பாலின திருமணத்துக்கு எதிராக மாநிலங்களவையில் ஓங்கி ஒலித்த குரல்

ஒரே பாலினத் திருமணம் குறித்து பீகார் மாநில முன்னாள் துணை முதலமைச்சரும், தற்போதைய பாஜக எம்.பி.யுமான சுஷீல்குமார் மோடி மாநிலங்களவையில் பேசியதாவது,

“இடதுசாரி கொள்கையாளர்களில் சிலரும், ஒரே பாலினத் திருமண ஆர்வலர்களும் இணைந்து இந்தியாவில் ஒரே பாலினத் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அங்கீகாரம் பெறுவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். ஒரே பாலினத் திருமணம் எந்த ஒரு தனிநபர் சட்டத்திலும் அங்கீகரிக்கப்படவோ, ஏற்றுக்கொள்ளப்படவோ இல்லை என்பதையும் மீறி ஒரே பாலினத் திருமணத்துக்கு அங்கீகாரம் அளிக்கப்பட்டால், இந்தியாவில் தனிநபர் சட்டத்தில் நிலவும் சம நிலையில் பெரும் குழப்பம் உண்டாக வாய்ப்புள்ளது. மேலும், இத்தகைய முக்கிய சமூகப் பிரச்சினையில் இரு நீதிபதிகள் அமர்வு முடிவெடுப்பது சரியானதாக இருக்காதென்பதால், நாடாளுமன்றத்தில் இதுகுறித்து விவாதம் நடத்தப்படுவதோடு, சமூகத்திலும் இது பேசும் பொருளாக ஆக வேண்டும். இது தொடர்பாக நீதிமன்றத்தில் மத்திய அரசு தனது கடுமையான எதிர்ப்பைப் பதிவு செய்ய வேண்டும்” என்று அவர் காட்டமாக பேசினார்.