பயிற்சி வகுப்புகளுக்கான பயிற்சியாளர்கள் தேவை - மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறையானது, 38 மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையங்களில் செயல்படும் தன்னார்வ பயிலும் வட்டங்கள் வாயிலாக TNPSC, TNUSRB, SSC, RRB, IBPS, TRB போன்ற தேர்வு முகமைகளால் நடத்தப்படும் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இத்தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் நடத்தப்படும் இப்பயிற்சி வகுப்புகளில் ஆண்டுதோறும் 20,000த்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு பயிற்சி பெறுகின்றனர்.

மேலும், இத்தன்னார்வ பயிலும் வட்டங்கள் மூலம் பல்வேறு போட்டித் தேர்வுகளுக்குத் தயாராகும் ஆர்வலர்களுக்கு உதவும் வகையில், தேர்ந்த பயிற்சியாளர்களைக் கொண்டு பயிற்சி வகுப்புகள் நடத்த உத்தேசிக்கப்பட்டுள்ளது. எனவே, 38 மாவட்டங்களில் இயங்கும் இலவச பயிற்சி வகுப்புகளுக்கு பயிற்சி அளிக்க முன்வரும் விருப்பமுள்ள மற்றும் முன்அனுபவம் உள்ள ஆசிரியர்கள் முன்னாள் மாணவர்கள் போட்டித்தேர்வு வெற்றியாளர்கள் ஆகியோர் https://bit.ly/facultyregistrationform என்ற Google Link இல் உள்ள விண்ணப்பத்தினை 10.01.2023-க்குள் பூர்த்தி செய்து சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுவதாகவும், இது குறித்து மேலும் விவரங்களுக்கு 044 – 2250 1006, 2250 1002 என்ற எண்களில் தொடர்பு கொள்ளுமாறும் கேட்டுக் கொள்ளப்படுவதாக வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறையின் இயக்குநர் கொ.வீரராகவ ராவ் தெரிவித்துள்ளார்.