ஹைதராபாத் : ஓயோ நிறுவனம் சமீபத்தில் நாடு முழுவதிலும் ஆன்மீக கலாச்சார பயணங்கள் எனும் பெயரில் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளது.
இந்த ஆய்வில் இந்த ஆண்டு அதிகமான பக்தர்கள் வருகை புரிந்த திருத்தலங்கள் பட்டியலில் காசி விஸ்வநாதர் கோயில் முதலிடத்தையும், திருப்பதி, பூரி ஜெகந்நாதர், அமிர்தசரஸ் பொற்கோயில் மற்றும் ஹரித்வார் ஆகிய கோயில்கள் அடுத்தடுத்த இடங்களையும் பெற்றுள்ளன.
கொரோனா பரவலால் நடைமுறையில் இருந்த ஊரடங்கு உத்தரவு ஒரு வழியாக முடிவுக்கு வந்ததைத் தொடர்ந்து கோயில்கள் திறக்கப்பட்ட பின்னர், இந்த ஆண்டு சீரடி, ரிஷிகேஷ், மதுரா, மகா பலேஸ்வர், மதுரை ஆகிய ஆன்மீக நகரங்கள் மிக வேகமாக வளர்ந்து வரும் சுற்றுலா தலங்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ளன.
ஓயோ நிறுவன ஓட்டல்களில் பக்தர்கள் தங்கும் அறைகள் முன்பதிவு செய்த அடிப்படையிலும், ஆய்வின் அடிப்படையிலும் இத்தகவல் வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.