சென்னை : சென்னையில் 22 கேரட் தங்கத்தின் விலை கடந்த சில மாதங்களாக ஏற்றமும், இறக்கமுமாகவே இருந்து வந்தது.
இந்நிலையில் கடந்த மாதம் 23ந் தேதி ஒரு சவரன் தங்கம் ரூ 40,528க்கும், 24ந் தேதி ரூ 40,608க்கும், ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் 25ந் தேதி ஏற்ற இறக்கமின்றியும், 26ந் தேதி ரூ 40,688க்கும், 27ந் தேதி ரூ 40,688க்கும், 28ந் தேதி ரூ 40,840க்கும், 29ந் தேதி ரூ 40,760க்கும், 30ந் தேதி ரூ 40,920க்கும், 31ந் தேதி பவுனுக்கு ரூ 120 அதிகரித்து ஒரு பவுன் ரூ 41,040க்கும் விற்கப்பட்டது.
கடந்த 2020ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 19ந் தேதிதான் ஒரு சவரன் தங்கம் ரூ 41 ஆயிரத்தை தாண்டி விற்பனையானது.
தங்கத்தின் விலை 28 மாதங்களுக்கு பிறகு மீண்டும் சவரன் 41 ஆயிரத்தை தாண்டி விற்பனையாகி வந்த நிலையில், நேற்று மேலும் சவரனுக்கு ரூ 160 அதிகரித்து ஒரு சவரன் ரூ 41,200க்கு விற்கப்பட்டது.
இந்நிலையில் இன்றும் சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ 328 உயர்ந்துள்ளது. ஆபரணத் தங்கம் ஒரு கிராம் ரூ 5,191க்கும், ஒரு சவரன் ரூ 41,528க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் ஒரு கிராம் வெள்ளி ரூ 1 அதிகரித்து ரூ 75.50க்கு விற்பனையாகிறது.
தங்கம் விலைத் தொடர்ந்து அதிகரித்து வருவது, நகை வாங்குவோரை கடும் அதிர்ச்சிக்குள்ளாக்கி வருகிறது.