அர்ஜெண்டினா - கார்டோபா பகுதியில் நிலநடுக்கம்...

அர்ஜென்டினாவில் 6.5 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. கார்டோபாவிலிருந்து வடக்கே 517 கிமீ தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது என தேசிய நிலநடுக்கவியல் மையம் தெரிவித்துள்ளது.

அர்ஜென்டினா, சாண்டியாகோ டெல் எஸ்டெரோ மாகாணத்தில் உள்ள மான்டே கியூமாடோவில் இருந்து 104 கி.மீ. மேலும் இது 600 கிலோமீட்டர் (372.82 மைல்) ஆழத்தில் ஏற்பட்டதாக ஐரோப்பிய-மத்திய தரைக்கடல் நில அதிர்வு மையம் (EMSC) அறிவித்துள்ளது. இன்று அதிகாலை ஏற்பட்ட நிலநடுக்கம் பராகுவே மற்றும் அர்ஜென்டினாவில் உணரப்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.