சிவகங்கை மாவட்டம், கீழடி அருங்காட்சியகத்தை, இம்மாத இறுதியில் திறக்கும் வகையில், இறுதி கட்டப் பணி நடந்து வருகிறது. சிவகங்கை மாவட்டம், கீழடியில், மத்திய, மாநில தொல்லியல் துறைகள் சார்பில், அகழாய்வுகள் செய்யப்பட்டு உள்ளன. இந்தாண்டும் அகழாய்வு பணி தொடர உள்ளது.
இவ்வேளையில் தமிழகத்தில், சங்க காலத்திலேயே நகர நாகரிகம் இருந்ததற்கான சான்றாகவும், தொழில், வேளாண்மையில் சிறந்து விளங்கியதற்கு சான்றாகவும், ஆயிரக்கணக்கான தொல்பொருட்கள் அங்கு கிடைத்தன.
சங்க காலத்தில், சாதாரண மக்களும் கல்வி அறிவு பெற்றவர்களாக இருந்ததற்கான ஆதாரங்களும், நிறைய கிடைத்துள்ளன. அதனை உலக ஆய்வாளர்கள் மற்றும் ஆர்வலர்கள் கண்டு அறியும் வகையில், கீழடியில், தமிழக அரசின் சார்பில், அருங்காட்சியகம் கட்டப்பட்டு, இறுதி கட்டப் பணி நடந்து வருகிறது.
இந்த அருங்காட்சியகத்தை, தமிழக முதல்வர் ஸ்டாலின், இந்த மாத இறுதியில் திறந்து வைப்பார் என, தொல்லியல் துறையினர் தெரிவித்தனர்.