பொது கழிவறையில் பாதி கதவு இருப்பது ஏன் தெரியுமா?

பொது இடங்களில் அமைந்திருக்கும் கழிவறைகளில் உள்ள கதவுகள் கீழும் மேலும் சற்று குறைவாகதான் இருக்கும்.இது போல் வடிவமைப்புக்கு என்ன காரணம் என யாராவது சிந்தித்துள்ளீர்களா? இதற்கு பல காரணங்கள் நாம் சொன்னாலும் அதற்கு பின்னணியில் இருப்பது ஒரு காரணம் மட்டும் தான். இதுபோன்ற கழிவறை அமைப்பு வணிக வளாகங்கள், அலுவலகங்கள், திரையரங்குகள் என பல இடங்களில் இருக்கும். கழிவறையின் உட்பகுதியில் இருப்பவரின் கால்கள் மட்டும், தலையை வெளியிலிருந்து பார்க்க முடியும்.
இப்படியான ஒரு அமைப்பு வருவதற்கு முதற் காரணம் எமெர்சென்சியை குறிக்கும். 

ஏனெனில் கழிவறைகளில் யாராவது மயங்கி விழுந்தாலோ அல்லது உடல் நிலைக்குறைபாடு காரணமாக உட்கார்ந்து இருந்தாலோ இவ்வாறு இருக்கும்போது இலகுவாக கண்டுபிடித்துக் கொள்ளலாம்.
மேலும் இந்த கழிவறைகளை எண்ணற்ற நபர்கள் பயன்படுத்துவார்கள். இதனால் அடிக்கடி சுத்தம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கும். இதற்கு இவ்வாறு கதவு இருப்பதால் சுத்தம் செய்ய இலகுவாக இருக்கும். பாதியளவு கழிவறைகள் என்பதால் தண்ணீரும் இலகுவாக வெளியில் சென்றுவிடும். இதனால் நோய்கள் பரவுவது தடுக்கப்படுகிறது.

பொது கழிவறை என்பதால் பாலியல் ரீதியான பிரச்சினைகள் நடப்பது இலகுவாக இருக்கும். இவ்வாறு நடக்கும் பிரச்னைகளை வெளியில் இருக்கும் ஒரு நபர் கண்டுக் கொள்ளலாம் என்பதற்காகவும் தான் இதனுடைய அமைப்புகள் செய்யப்பட்டுள்ளது. கழிவறை கட்டுமான பணியில் இருப்பவர்கள் இவ்வாறு கதவு வைக்கும்போது பணச் செலவும் குறைவாக தான் இருக்கும்.