சென்னையில் வாகன ஓட்டிகள் தவறான பாதையில் இயக்குவது போன்ற விதிமீறல்களில் அடிக்கடி ஈடுபடுகின்றனர். இதை கறைப்பதற்காக சென்னை முழுவதும் போக்குவரத்து போலீசார் நேற்று வரை இரு தினங்களாக ‘ராங் சைடு’ எனப்படும் எதிர்திசையில் வாகனங்களை இயக்குவோர் கண்டறியும் சோதனையில் ஈடுபட்டனர். அதில் சுமார் 5,667 வாகன ஓட்டிகள் சிக்கினர். இவர்கள் மீது, போலீசார் வழக்குப்பதிவு செய்து 15.67 லட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.