PF Account வைத்து இருக்கும் ஊழியர்களுக்கு முக்கியமான நல்ல செய்தி ஒன்றை மத்திய அறங்காவலர் குழு வெளியிட்டு உள்ளது. நாம் ஒவ்வொரு மாதமும் சம்பாதிக்கும் தொகையில், குறிப்பிட்ட தொகை நமது PF Accountற்கு செல்லும். நிறுவனத்திடம் இருந்தும், நம்மிடம் இருந்தும் குறிப்பிட்ட தொகை இப்படி மாதம் மாதம் நமது PF Accountல் சேரும்.
EPFO பக்கத்தில் இருக்கும் பாஸ்புக் தளத்தில் நம்முடைய PF Accountஐ குறிப்பிட்டு நாம் நம்முடைய தொகை இருக்கிறது என்று கண்டுபிடிக்க முடியும். இந்த PF Accountல் சேரும் பணத்திற்கு வட்டியும் வழங்கப்படும்.
தேவைப்படும் பட்சத்தில் இடைப்பட்ட நேரத்தில் கூட இந்த PF தொகையை எடுத்துக்கொள்ள முடியும். அவசர தேவைகள், மருத்துவ தேவைகளுக்கு இந்த பணத்தை நீங்கள் எடுத்துக்கொள்ள முடியும். PF Account போக Retirement தொகையும் இதேபோல் வழங்கப்படும். ஆனால் அதை குறிப்பிட்ட வயதிற்கே பின்பே எடுக்க முடியும். இந்த நிலையில்தான் அதிக ஓய்வூதியம் பெறுவதற்கான வாய்ப்புகளை மத்திய அரசு ஏற்படுத்திக்கொடுத்து உள்ளது. அதன்படி அதிக ஓய்வூதியத்தைப் பெற 1995-ன் (EPS-1995) கீழ், தகுதியான ஓய்வூதியம் பெறுவோர் விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
அதிக ஓய்வூதியத்தைப் பெற 1995-ன் (EPS-1995) கீழ் உள்ள லிஸ்டில் வருபவர்கள் மட்டும் விண்ணப்பிக்க முடியும். முன்பு இதற்கான கடைசி தேதி மார்ச் 3ம் தேதி வரை இருந்தது. ஆனால் மக்கள் பலர்.. நாங்களும் அதிக ஓய்வூதியம் பெற விரும்புகிறோம். ஆனால் தேதி முடிந்துவிட்டது. எனவே தேதியை நீட்டிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று கடைசி தேதியை மே 3, 2023க்கு மத்திய அரசு மாற்றி உள்ளது. ஊழியர்களுக்கு கிட்டத்தட்ட ஜாக்பாட் அறிவிப்பு போல இது வந்துள்ளது. 2014ல் இருந்து ஓய்வூதிய வருமான வரம்பு 15 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது.
இது முன்பு 6500 ரூபாயாக இருந்தது. ஊழியர்கள் தங்களின் ஓய்வூதியத்தை முறையாக பெறவும், குறைந்த சம்பளம் பெறும் நபர்கள், அதாவது 15 ஆயிரத்திற்கு கீழ் சம்பளம் பெறும் நபர்கள் தேவையின்றி ஓய்வூதியத்திற்கு பணம் செலவழிக்க கூடாது என்பதாலும் இந்த மாற்றங்கள் செய்யப்பட்டு உள்ளது. அதேபோல் அடிப்படை ஊதியம் 15 ஆயிரத்திற்கு மேல் இருந்தால், ஊழியர்களின் விருப்பத்திற்கு ஏற்ப பென்ஷன் தொகைக்கு என்று 8.33 சதவிகிதம் கொடுக்க வேண்டும் என்று உத்தரவிடப்பட்டு உள்ளது. நீங்கள் அதிக பென்ஷன் தொகை பெற விரும்பினால் அதற்கான விண்ணப்பத்தை EPFO தளத்தில் பெற முடியும். அதை பில் செய்து இணையத்தில் விண்ணப்பிக்க முடியும். அல்லது நேரடியாக EPFO அலுவலகத்தில் சமர்ப்பிக்க முடியும்.