புஷ்பா 2 படத்தின் மிரட்டலான லுக்..

Pushpa-The-Rule-1200x675

சென்னை : இயக்குனர் சுகுமார் இயக்கும் ‘புஷ்பா’ படத்தின் இரண்டாம் பாகத்தில் அல்லு அர்ஜூனின் மிரட்டலான லுக்கைப் பார்த்து ரசிகர்கள் மிரண்டு போனார்கள். தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் சுகுமார் இயக்கத்தில் கடந்த 2021 ஆம் ஆண்டு டிசம்பர் 18 ஆம் தேதி புஷ்பா திரைப்படம் வெளியானது.
தமிழ், தெலுங்கு, இந்தி மற்றும் கன்னடம் ஆகிய மொழிகளில் பான் இந்திய படமாக வெளியானது. இந்த படத்தில் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் ஆகியோர் நடித்திருந்தனர்.

புஷ்பா முதல் பாகத்தில் அல்லு அர்ஜூன் லாரி டிரைவராகவும் சந்தனக் கடத்தல்காரராகவும் நடித்திருந்தார். அல்லு அர்ஜூனின் பாடி லாங்குவேஜ், பேச்சு, என சும்மா தரமாக இருந்தது. உலகம் முழுவதும் இப்படம் 400 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்தது. இந்தியில் டப் செய்யப்பட்டு வெளியானபோது, அங்கு மட்டும் கிட்டத்தட்ட 100 கோடி ரூபாயை அள்ளி பாலிவுட்டை வாய்பிளக்க வைத்தது.

நடிகை ராஷ்மிகா மந்தனா படத்தில் ஸ்ரீவள்ளி என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மைத்ரி மூவி மேக்கர்ஸ் இந்தப் படத்தை தயாரித்துள்ளனர். புஷ்பா 2 படத்தில் பகத் பாசில் நடித்துள்ள காட்சிகளும் சமீபத்தில் படமாக்கப்பட்டன. பஹத் பாசில் மற்றும் இயக்குனர் சுகுமார் படப்பிடிப்பு தளத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானது.

புஷ்பா 2 படத்தின் டிரைலரில், சிறையில் இருந்து தப்பிச்சென்ற புஷ்பாவை காவல்துறையினர் சுட்டுகொன்று விட்டனர் என்றும், புஷ்பா வெளிநாட்டுக்கு தப்பி சென்று இருக்கலாம் என்றும் செய்திகள் பரவி வருகிறது. இதனால், புஷ்பாவின் ஆதரவாளர்கள் கடைகளை அடித்து நொறுக்கி வருகின்றனர். இதையடுத்து புலிக்காக வைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராவில் புஷ்பா இருப்பதை பார்த்த பொதுமக்கள் புஷ்பா உயிருடன் தான் இருக்கிறார் என்று ஆனந்த கூத்தாடும் காட்சிகளுடன் டிரைலர் இணையத்தில் வைரலானது.

இந்நிலையில், புஷ்பா 2 படத்தில் அல்லு அர்ஜூன் மிரட்டலான லுக்குடன் இருக்கும் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. அந்த போஸ்டரில், காளி உருவத்தில், பெரிய கண்கள், எலுமிச்சைப்பழ மாலை, பெரிய மூக்குத்தி, காதுக்கு கம்மல், கைகளில் வளையல்கள் மற்றும் புடவை அணிந்து துர்கா தேவியை போல் காட்சி அளித்துள்ளார். இந்த போஸ்டரை பார்த்த ரசிகர்கள் மிரண்டு போய், எல்லாம் காந்தாரா எஃபெக்ட் என்று கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.