அஜீத்தின் 62வது படம்…
நடிகர் அஜீத்தின் 52வது பிறந்தநாளை முன்னிட்டு இன்று அவர் நடிக்கும் அடுத்த படத்தின் தலைப்பு வெளியாகி உள்ளது. இதனால், அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் உள்ளனர். அவரது நடிப்பில் உருவாக உள்ள 62வது படத்தின் தலைப்பை லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. படத்தின் தலைப்பு ‘விடாமுயற்சி’. இந்த படத்தை மகிழ் திருமேனி இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார்.
உதயநிதியின் அடுத்த படம்…
மாரி செல்வராஜ் இயக்கத்தில், உதயநிதி நடிப்பில் உருவாகியுள்ள ‘மாமன்னன்’ படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது. இன்று ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி அளிக்கும் வகையில் புதிய போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டில் நிலவும் முக்கியமான அரசியல் கதையை பேசும் இந்த படத்தில் ஃபகத் பாசில், வடிவேலு முக்கிய ரோல்களில் நடித்துள்ளனர். படம் ஜூனில் வெளியாகிறது.