இரத்த கொதிப்பை கட்டுக்குள் கொண்டுவரும் கண்டங்கத்தரி!

எமது உடலில் பல வகையான நோய்கள் வந்து ஒட்டிக் கொண்டுதான் இருக்கிறது. அந்த ஒவ்வொரு நோய்களுக்கு ஒவ்வொரு காய்கறிகளும் பழங்களும் மருந்தாகிறது. அப்படி பல வியாதிகளுக்கு மருந்தாகிறது இந்த கண்டங்கத்தரி. இது காட்டுப்பகுதிகளில் செம்மண், வண்டல் மண் இருக்கும் வளமான இடங்களில் கொடிபோல் வளர்ந்திருக்கும்.

கண்டங்கத்திரியின் நன்மைகள்

நோய் எதிர்ப்பு சக்தி அதிகம் கொண்டிருக்கிறது.
நுண்ணுயிர்களை அழிக்கும் தன்மை உள்ளது.
இந்தச் செடி சளி, மூக்கடைப்பு, இறுமல் போன்ற பிரச்சினைகளை குணப்படுத்தும்.
சிறுநீரகக் கற்களையும் கரைக்கும் ஆற்றல் கொண்டது.
இரத்த அழுத்தத்தைச் சீராக்கும்.
தலைவலி, வாதநோய்களைப் போக்கும்.
உடல் சூடு மற்றும் சிறுநீர் உபாதைகளைத் தீர்க்கும்.
வியர்வை நாற்றத்தை போக்கும்.
மூட்டு வலியைப் போக்கும்.

மருத்துவ பயன்

கண்டங்கத்திரி பழத்தை நன்றாக உலர்த்தி பொடியாக்கி தேனில் கலந்து 2 வேளை குடித்து வந்தால் குழந்தைகளுக்கு ஏற்படும் இருமல் பிரச்சினை தீரும்.
கண்டங்கத்திரியின் இலையின் சாற்றை இடித்து பிழிந்து சம அளவில் தேங்காய் எண்ணெய் சேர்ந்து காய்ச்சி வடிகட்டி உடலில் உடலில் தேய்த்து வந்தால் வியர்வை மணம் இல்லாமல் போகும்.
கண்டங்கத்திரி இலையை அரைத்து 1 1/2 தேக்கரண்டி சாறு எடுத்து அதனுள் ஒரு தேக்கரண்டி தேன் சேர்த்து சாப்பிட்டால், சிறுநீர் பாதையில் ஏற்படும் எரிச்சல் நீங்கும்.
கண்டங்கத்திரி இலையுடன் சிறிதளவு தூதுவளை, ஆடாதொடை இலைகளை சேர்த்து வெயிலில் காய வைத்து பொடியாக்கி அதை தேனில் குழைத்து தினமும் ஒரு வேளை சாப்பிட்டு வந்தால் அனைத்து உடல் பிரச்னைகளும் குணமாகும். தேங்காய் எண்ணெயில் சிறிதளவு கண்டங்கத்திரி இலையைப் போட்டு, காய்ச்சி உடலில் தடவினால் தோல் எரிச்சல், வியர்வை பிரச்சினை தீரும்.