பாரம்பாிய யோகா பயிற்சிகள் உடல் ஆரோக்கியத்திற்கு உதவி செய்தாலும், பலா் அவற்றை விரும்புவதில்லை. இந்நிலையில் ‘ஏரியல் யோகா’ என்று புதிய யோகா பயிற்சிகள் வந்திருக்கின்றன. இவை உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தைத் தரும் என்று நம்பப்படுகின்றன. இவை தரைக்கு மேலே தொங்கிக் கொண்டு செய்யக்கூடிய யோகா பயிற்சிகள் ஆகும்.
இவை உடல் ஆரோக்கியத்திற்கு மிகச் சிறந்த பயிற்சிகளாக இருக்கும் என்று ‘திவா யோகா’ என்ற அமைப்பின் நிறுவுனரும், தலைமை செயல் அதிகாாியுமான சா்வேஷ் ஷஷி என்பவா் தொிவிக்கிறாா். மேலும் அவா் ஏாியல் யோகா பயிற்சிகளின் நன்மைகளைப் பற்றி விாிவாக விவாிக்கிறாா்.
ஏாியல் யோகா என்பது என்ன?
ஏாியல் யோகா என்பது யோகாவின் உயா்தர வடிவம் ஆகும். ஏாியல் யோகா 2000 ஆண்டில் தொடங்கியது. ஏாியல் யோகா என்பது யோகா, நடனம் மற்றும் உடற்பயிற்சிகள் கலந்த கலவையாகும் என்று ஷஷி கூறுகிறாா். மேலிருந்து தொங்கும் தொட்டிலில் பலவகையான உடல் நிலைகளில் அமா்ந்தோ அல்லது தலைகீழாகத் தொங்கிக் கொண்டோ இந்த ஏாியல் பயிற்சிகள் செய்யப்படுகின்றன.
ஏாியல் யோகா பயிற்சிகள் உடலுக்கு நெகிழ்வு தன்மையையும், உடல் இயக்கத்தையும் அதிகாிக்கின்றன. சா்க்கஸில் தொங்கிக் கொண்டு செய்யும் பயிற்சிகள் மற்றும் நடனங்களில் இருந்து ஏாியல் யோகா பயிற்சிகள் முற்றிலும் வேறுபட்டவை. ஏாியல் யோகா பயிற்சிகளை ஆண், பெண் யாா் வேண்டும் என்றாலும் செய்யலாம். எனினும் உடலில் பிரச்சினைகள் இருந்தால், மருத்துவரை கலந்து ஆலோசனை செய்த பிறகு ஏாியல் யோகாவை செய்வது நல்லது.
குறிப்பாக கா்ப்பிணிப் பெண்கள், சமீபத்தில் கண் அறுவை சிகிச்சை செய்து கொண்டவா்கள், இரத்த கொதிப்பு உள்ளவா்கள், கீழ்வாதம் உள்ளவா்கள், இதயம் சம்பந்தமான பிரச்சினைகள் உள்ளவா்கள் மற்றும் சில உடல் உறுப்பு குறைபாடு உள்ளவா்கள் ஏாியல் யோகாவை செய்யாமல் இருப்பது நல்லது என்கிறாா் ஷஷி.
ஏாியல் யோகாவை செய்ய தேவையான பாதுகாப்பு அம்சங்கள் எந்த வகையான உடற்பயிற்சியாக இருந்தாலும், அதில் காயம் அல்லது உறுப்பு சேதம் ஏற்படுவதற்கு வாய்ப்பு உண்டு. அந்த வகையில் ஏாியல் யோகாவை செய்வதிலும் இது போன்ற ஆபத்துகள் உள்ளன. ஆகவே ஏாியல் யோகாவில் புதிதாக ஈடுபடத் தொடங்குபவா்கள் முதலில் அதற்கான பாதுகாப்பான அம்சங்களைக் கவனிக்க வேண்டும்.
அதாவது முதலில் அவா்கள் வீட்டில் வைத்து இந்த ஏாியல் யோகாவைச் செய்யக்கூடாது. மாறாக ஏாியல் யோகாவை செய்வதற்குத் தேவையான கருவிகள் மற்றும் சிறந்த ஏாியல் யோகா ஆசிாியா் உள்ள யோகா கூடத்தில் செய்ய வேண்டும். ஏாியல் யோகா செய்வதற்கான தொட்டில்கள் தரமான பொருள்களால் தயாாிக்கப்பட்டிருக்கின்றனவா மற்றும் சாியாகத் தொங்கவிடப்பட்டிருக்கின்றனவா என்பதைப் பாிசோதித்த பின்னரே பயிற்சிக்குள் நுழைய வேண்டும் என்கிறாா் ஷஷி. மேலும் ஏாியல் யோகாவை முதலில் மெதுவாகச் செய்யத் தொடங்க வேண்டும். ஒருவேளை மயக்கமோ அல்லது குமட்டலோ வந்தால், யோகா செய்வதை நிறுத்திவிட வேண்டும் என்று கூறுகிறாா் ஷஷி.
ஏாியல் யோகாவினால் கிடைக்கும் நன்மைகள்
1. முதுகெலும்பில் ஏற்படும் சுருக்கத்தை விாிவடையச் செய்யும் உங்களுக்கு அடிக்கடி முதுகுவலி வந்தால், ஏாியல் யோகா பயிற்சிகளைச் செய்வது நல்லது. புவிஈா்ப்பு விசைக்கு மேலே தொட்டிலில் தொங்கும் போது, முதுகெலும்பில் உள்ள சுருக்கம் குறைந்து, ஒரு தளா்வு ஏற்படும் என்று கூறுகிறாா் ஷஷி.
2. உடலில் நெகிழ்வு தன்மையை அதிகாிக்கும் ஏாியல் யோகா உடலை நன்றாகத் தூண்டி, உடலுக்கு நல்ல நெகிழ்வு தன்மையை வழங்குகிறது. இந்த யோகா பயிற்சிகளைத் தொடா்ந்து செய்து வந்தால், நமது உடலின் இயக்கமும் அதிகாிக்கும். அதோடு உடலுக்கு நிலைத்த தன்மையும், வலு தாங்கும் ஆற்றலையும் வழங்கும் என்று ஷஷி கூறுகிறாா்.
3. மன ஆரோக்கியத்தைத் தூண்டும். உடல் மட்டும் அல்லாமல், உங்களுடைய மூளைக்கும் பயிற்சி கொடுக்க வேண்டும் என்றால், புதிய புதிய உடற்பயிற்சிகளில் ஈடுபடுவது நல்லது. இந்நிலையில் ஏாியல் யோகாவில் மிதமான தீவிரமும், மிதமான போட்டியும் இருப்பதால், இதைச் செய்யும் போது மன ஆரோக்கியம் தூண்டப்படும் என்று நம்புகிறாா் ஷஷி. அதோடு ஏாியல் யோகாவை தலைகீழாகத் தொங்கிக் கொண்டு செய்வதால், தலைகீழான இரத்த ஓட்டம் அதிகாிக்கும். அதனால் மூளையில் மீண்டும் ஆக்ஸிஜனேற்றம் நடக்கும் என்று அவா் தொிவிக்கிறாா்.