சின்னத்திரையில் சேனல்களுக்கு நடுவில் போட்டி இருந்து வருகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்தது தான். ரசிகர்களை கவர சேனல்கள் போட்டிபோட்டுக்கொண்டு புதுப்புது நிகழ்ச்சிகள் மற்றும் சீரியல்களை ஒளிபரப்பி வருகின்றன. அதிலும் குறிப்பாக சன் டிவி மற்றும் விஜய் டிவி இடையே தான் உச்சகட்ட போட்டி இருந்து வருகிறது. சன் டிவி தான் நீண்டகாலமாக நம்பர் 1 சேனலாக இருந்து வருகிறது.
இந்நிலையில் சன் டிவியை விஜய் டிவி முந்திவிட்டதாக தகவல் ஒன்று பரவி வருகிறது. அதை விஜய் டிவி ரசிகர்களும் கொண்டாடி வருகின்றனர்.
இந்த புள்ளிவிவரம் இந்த வருடத்தின் 24ம் வாரத்தில் தமிழ்நாட்டில் URBAN பகுதிக்கான புள்ளி விவரம் மட்டுமே. இதில் சன் டிவியை விஜய் டிவி பின்னுக்கு தள்ளி இருக்கிறது. இருப்பினும் ஒட்டுமொத்த ரேட்டிங்கில் சன் டிவி தான் வழக்கம் போல முதலிடத்தில் இருக்கிறது.