முருங்கை இலை எண்ணற்ற சத்துக்கள் நிறைந்து காணப்படுகின்றன. வாரத்திற்கு இரு முறை முருங்கை இலையை சாப்பிட்டு வந்தால் ஆஸ்துமா, தோல் நோய் போன்ற பல நோய்களிலிருந்து விடுபட்டு விடலாம்.
வெறும் வயிற்றில் தினமும் முருங்கை இலை சூப் குடித்து வந்தால் உடல் எடை கிடுகிடுவென குறைவதுடன், பல நன்மைகளும் நமக்கு கிடைக்கும். சரி… எப்படி முருங்கை இலை சூப் செய்யலாம் என்று பார்ப்போம்.
தேவையானவை
முருங்கை இலை – 1 கப், அரிசி தண்ணீர் – 2 கப், பச்சை மிளகாய் – 1, தேங்காய் பால் – 2 கப், சீரகம் – 1 ஸ்பூன், மிளகு – அரை ஸ்பூன், சாம்பார் வெங்காய்ம் – 4, தக்காளி – 1, உப்பு – தேவையான அளவு
செயல் விளக்கம் :
முதலில் ஒரு பாத்திரத்தில் அரிசி ஊற வைத்த தண்ணீரை ஊற்றி நன்றாக கொதிக்க விட வேண்டும். பிறகு, சுத்தம் செய்து வைத்த முருங்கை இலை, வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும்.
பிறகு, தேங்காய் பால், மிளகு, சீரகம் சேர்த்து 5 நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்க வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் லேசான எண்ணெய் ஊற்றி அதில் சீரகம், கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். சுவையான முருங்கை இலை சூப் ரெடி.
இந்த சூப்பை தினமும் குடித்து வந்தால் உடல் எடை குறைவதுடன், சளி, தொண்டை வலி குறையும்.