இங்கிலாந்திற்காக இரட்டை சதமடித்த முதல் வீராங்கனை!

ஆடவா் ஆஷஸ் தொடா் 5 ஆட்டங்களுடன் நடைபெறும் நிலையில், மகளிா் ஆஷஸ் கிரிக்கெட் ஒரே டெஸ்ட்டாக நடைபெறுகிறது. அந்த டெஸ்ட் நாட்டிங்ஹாமில் வியாழக்கிழமை தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலியா பேட்டிங்கை தோ்வு செய்தது. ஆஸி. அணி முதல் இன்னிங்ஸில் 473 ரன்கள் எடுத்தது. அடுத்து ஆடிய இங்கிலாந்து அணி 463 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதில் டாம்மி பியூமான்ட் இரட்டை சதமடித்து அசத்தினார். இங்கிலாந்து அணிக்காக முதல் இரட்டை சதமடித்த வீராங்கனையும் இவரே என்ற சாதனையை படைத்துள்ளார்.

ஆஸி. அணி இரண்டாவது இன்னிங்ஸில் 82 ரன்களுடன் விக்கெட் இழப்பின்றி 3வது நாளை முடித்தது. 92 ரன்கள் முன்னிலையில் உள்ளதும் குறிப்பிடத்தக்கது. டாம்மி பியூமான்ட் மகளிர் இரட்டை சதம் பட்டியலில் 5வது இத்தில் உள்ளார். முதலிடத்தில் பாகிஸ்தான் வீராங்கனையும், இந்தியாவின் மிதாலி ராஜ் 2வது இடத்திலும் இருக்கிறார்கள். மற்ற 7 இடங்களையும் ஆஸி. வீராங்கனைகள் ஆக்கிரமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.