பொதுவாக குழந்தைகளுக்கு அடிக்கடி தும்பல், இருமல் ஆகிய பிரச்சினைகள் வந்துவிடும். இதற்காக அடிக்கடி மருத்துவமனைக்கு செல்ல முடியாது, வீட்டிலுள்ள பொருட்களை கொண்டு கசாயம், ரசம், டீ ஆகிய மருந்துவ குணமிக்க உணவுகளை எடுத்து கொள்ளலாம். அந்தவகையில், ஒட்டு மொத்த சளியையும் முறிக்கும் கசாயம் எப்படி செய்வது என தெரிந்து கொள்வோம்.
தேவையானவை
கருப்பு மிளகு – 1/4 கப்
துளசி – 10 இலைகள்
பனை வெல்லம் – 2
தண்ணீர் – 2 கப்
செய்முறை விளக்கம்
1. முதலில் ஒரு கடாயை அடுப்பில் வைத்தபின் அவை சூடானதும், அதில், மிளகுகளை போட்டு வறுத்தெடுக்க வேண்டும்.
2. பின்னர் அதனை எடுத்து உரலில் போட்டு நன்றாக இடித்து கொள்ளவும்.
3. அடுப்பில் இன்னொரு பாத்திரத்தை வைத்து தேவையானளவு தண்ணீரை ஊற்றி இடித்த மிளகு, வெல்லம், துளசி இலை சேத்து மிதமான தீயில் கொதிக்க வைக்க வேண்டும்.
4. சரியாக 15 நிமிடங்கள் ஆனதும் வடிகட்டி வெது வெதுப்பாக வந்ததும் குடிக்க வேண்டும்.
இவ்வாறு தொடர்ந்து வாரத்திற்கு இரண்டு முறை செய்தால் சளி, இருமல், தொண்டை வலி நீங்கும்.