ஜியோ நிறுவனம் சமீபத்தில் தனது வாடிக்கையாளர்களுக்கு 5ஜி சேவையை வழங்கி வரும் நிலையில் அந்நிறுவனத்தின் 5ஜி சேவையை ஏராளமானோர் தற்போது பயன்படுத்தி வருகின்றனர். இந்த நிலையில் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு மேலும் ஒரு சிறப்பு சேவையாக 5ஜி ஸ்மார்ட் ஃபோனை அறிமுகப்படுத்த ஜியோ திட்டமிட்டுள்ளதாகவும் விரைவில் இது ஒரு அறிவிப்பு வெளியாகும் என்றும் கூறப்படுகிறது என்று கூறப்படுகிறது. மேலும் இந்த ஸ்மார்ட் போனின் விலை 10 ஆயிரத்துக்குள் தான் இருக்கும் என்று கூறப்படுகிறது.
மேலும் இந்த ஸ்மார்ட்போன் MediaTek Dimensity 700 பிராஸசர் மூலம் இயக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, 4GB RAM மற்றும் 32GB இன்டெர்னல் ஸ்டோரேஜ் உடன் கொண்ட இந்த போன், 6.5-இன்ச் HD+ டிஸ்ப்ளே, 13MP பின்புற கேமரா மற்றும் 8MP முன் செல்பி கேமரா ஆகியவற்றைக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. மேலும் இந்த போன் ஆண்ட்ராய்டு 11 ஓஎஸ் மற்றும் 5000 mAh பேட்டரி மூலம் இயக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜியோபோன் 5ஜி வரும் மாதங்களில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சரியான வெளியீட்டு தேதி இன்னும் அறிவிக்கப்படவில்லை.