கால் விரல்களை வைத்தே உங்களின் ஆளுமை பண்புகள் எவ்வாறு இருக்கும்!​

ஒருவரின் ஆளுமைத் திறனை தெரிந்து கொள்ள பல அளவீடுகள் இருக்கின்றன. ஒருவரின் பர்சனாலிட்டி எப்படி இருக்கும் என்பது பற்றி ஆப்டிகல் இல்யூஷன் இமேஜ்கள் வெளிப்படுத்துவதாக கூறப்படுகிறது. இது ஒருபக்கம் இருந்தாலும் ஒருவரின் தோற்றம், உருவத்தில் சில அமைப்புகள் உள்ளிட்ட சில விஷயங்களை வைத்தும் எளிதில் தெரிந்து கொள்ள முடியுமாம்.

அந்த வகையில், இன்று நாம் பார்க்க போவது Foot Shape பர்சனாலிட்டி டெஸ்ட் ஆகும். அதாவது ஒருவரின் மேல் பாதம் என்ன ஷேப்பில் இருக்கிறதோ அதை பொறுத்து அவரின் ஆளுமை பண்புகள் இருக்கும். உங்கள் மேல் பாதத்தின் ஷேப் என்னவென்பதையும், அந்த வடிவத்துக்கு ஏற்ப ஒருவரின் ஆளுமை பண்புகள் மற்றும் குணாதிசியங்கள் எப்படி இருக்கும் என்பதை அறியவும் தொடர்ந்து படியுங்கள். உங்கள் Foot Shape உங்களின் ஆளுமை பற்றி என்ன வெளிப்படுத்துகிறது என்பதை அறிய இங்கே 4 வகையான ஷேப்கள் கொடுக்கப்பட்டுள்ளன. அவற்றை கீழே பார்க்கலாம்.

1. ரோமன் ஃபுட் ஷேப் (Roman Foot Shape):

உங்களது ஃபுட் ஷேப்பானது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் படத்தில் இருப்பதை போல உள்ளதென்றால் அதற்கு ரோமன் ஃபுட் ஷேப் என்று பெயர். உங்களது காலின் கட்டை விரல் அதற்கடுத்து இருக்கும் இரண்டாவது மற்றும் மூன்றாவது விரல் உள்ளிட்டவை ஒரே நீளத்தில் இருந்து, நான்காவது மற்றும் ஐந்தாவது விரல்கள் நீலம் குறைவாக இருந்தால் உங்களுக்கு Roman foot உள்ளது. உங்களது ஃபுட் ஷேப் இப்படி இருந்தால் நீங்கள் அதிக நட்பு குணமுடையவர், உங்களை சுற்றி மக்கள் இருப்பதையும், புதிய நபர்களை சந்திப்பதையும் அதிகம் விரும்புவீர்கள். எதிலும் மிகுந்த நம்பிக்கை மற்றும் உறுதியுடன் செயல்படுவீர்கள்.

உங்களிடம் இருக்கும் வலுவான தலைமைத்துவ உணர்வு காரணமாக பாராட்டுகளை குவிப்பீர்கள். உங்கள் வசம் கொடுக்கப்படும் வேலைகளை தனித்துவ பாணியில் முடிப்பீர்கள். நீங்கள் மற்றவர்களை பார்த்து காப்பியடிக்க மாட்டீர்கள், அதே சமயம் மற்றவர்கள் உங்களை காப்பியடிப்பது கடினம். எப்போதுமே நல்ல சிந்தனை மற்றும் எண்ணத்துடன் இருப்பீர்கள். மோதல்களை தீர்ப்பதில் நீங்கள் வல்லவர். சில நேரங்களில் பிடிவாத குணத்தை வெளிபடுத்துவீர்கள். உங்களை நம்புவோருக்கு நீங்கள் நிச்சயமாக ஒரு நம்பிக்கைக்குரிய மற்றும் அக்கறையுள்ள நபராக இருப்பீர்கள்.

2. ஸ்கொயர் ஃபுட் ஷேப் (Square Foot Shape):

உங்களது ஃபுட் ஷேப்பானது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இமேஜில் இருப்பதை போல உள்ளதென்றால் அதற்கு ஸ்கொயர் ஃபுட் ஷேப் என்று பெயர். உங்கள் கட்டை விரல் தொடங்கி கால்களில் இருக்கும் 5 விரல்களும் ஒரே நீளத்தில் இருந்தால் உங்களுக்கு ஸ்கொயர் ஃபுட் ஷேப் உள்ளது. உங்களது ஃபுட் ஷேப் இப்படி இருந்தால் நீங்கள் மிகவும் பிராக்டிகலாக இருப்பீர்கள் மற்றும் மிகவும் நம்பகமானவர். பொறுப்புணர்வு மிக்கவர் நீங்கள் என்பதோடு மிகவும் கடின உழைப்பாளியாகவும் இருப்பீர்கள்.

பிரச்னைகளுக்கு சிறந்த முறையில் தீர்வு காண்பதில் வல்லவராக இருப்பீர்கள். நேரத்தையும் நிர்வகிப்பதில் சிறந்தவராக இருப்பீர்கள். கொடுக்கும் வாக்குறுதிகளை நிறைவேற்றுவதில் உங்களை அடித்து கொள்ள ஆளில்லை. மிகவும் நியாயமானவராக இருப்பீர்கள். உங்களது புத்திசாலித்தனம், பொறுமை மற்றும் விடாமுயற்சி பிறரை கவரும். இலக்குகளை நிர்ணயிப்பதிலும் அவற்றை அடைவதிலும் சிறப்பாக செயல்படுவீர்கள்.

3. கிரீக் ஃபுட் ஷேப் (Greek Foot Shape):

உங்களது ஃபுட் ஷேப்பானது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இமேஜில் இருப்பதை போல உள்ளதென்றால் அதற்கு கிரீக் ஃபுட் ஷேப் என்று பெயர். உங்களது கால்களில் இருக்கும் கட்டை விரலை விட, அதற்கு அடுத்து இருக்கும் இரண்டாவது கால் விரல் பெரியதாக இருந்தால் உங்களுக்கு கிரீக் ஃபுட் ஷேப் உள்ளது. இது ஃபிளேம் ஃபுட் ஷேப் அல்லது ஃபயர் ஃபுட் ஷேப் என்றும் அழைக்கப்படுகிறது. உங்களது ஃபுட் ஷேப் இப்படி இருந்தால் நீங்கள் படைப்பாற்றல் மிகுந்தவராக இருப்பீர்கள். உள்ளுணர்வு மூலமே பல விஷயங்களை அறிந்து கொள்ளும் திறன் பெற்றிருப்பீர்கள்.

ஆற்றல் மிகுந்த சுறுசுறுப்பான நபராக காணப்படுவீர்கள். எப்போது வேண்டுமானாலும் சவாலை எதிர்கொள்வதிலும், புதிய யோசனைகளை செயல்படுத்துவதிலும் நீங்கள் வல்லவர். தன்னம்பிக்கையோடு செயல்படும் நீங்கள் எதை செய்வதும் சாத்தியம் என்ற வலுவான நம்பிக்கை கொண்டிருப்பதோடு, மற்றவர்களையும் இதே வழியில் ஊக்குவிப்பீர்கள். ரிஸ்க் எடுக்க அஞ்சமாட்டீர்கள். உங்களை நம்புவோருக்காக முழு ஆதரவு கொடுப்பீர்கள்.

4. எகிப்தியன் ஃபுட் ஷேப் (Egyptian Foot Shape):

உங்களது ஃபுட் ஷேப்பானது கீழே கொடுக்கப்பட்டிருக்கும் இமேஜில் இருப்பதை போல உள்ளதென்றால் அதற்கு எகிப்தியன் ஃபுட் ஷேப் என்று பெயர். உங்களது கால் கட்டை விரல் மிக நீளமாகவும் இதற்கடுத்து இருக்கும் 4 கால்விரல்கள் 45 டிகிரி கோணத்தில் சாய்வாகவும் இருந்தால், உங்களுக்கு எகிப்தியன் ஃபுட் ஷேப் இருக்கிறது. உங்களது ஃபுட் ஷேப் இப்படி இருந்தால் நீங்கள் சுதந்திரமாக செயல்பட விரும்புபவர் மற்றும் பிடிவாத குணமுடையவர். உங்களிடம் படைப்பாற்றல் மற்றும் கற்பனை திறன் அதிகம் இருக்கும். பிறர் என்ன தான் முயன்றாலும் உங்களுக்கு உடன்படாத விஷயங்களில் நீங்கள் இறங்க மாட்டீர்கள். 

முக்கிய விஷயங்களில் சரியான முடிவெடுப்பதில் சிறந்தவராக இருப்பீர்கள். உங்களுக்கு நெருக்கமானவர்களிடம் நீங்கள் மிக விசுவாசமாக இருப்பீர்கள். ரகசியங்களை காப்பற்றுவதில், உறுதிமொழிகளை பின்பற்றுவதில் நீங்கள் வல்லவர். லட்சியங்களை நோக்கி உற்சாகமாக செல்வீர்கள். உங்களின் பிரச்னைக்கும் சரி, உங்களிடம் பிரச்னையை எடுத்து வருவோருக்கும் சரி ஆக்கப்பூர்வமான தீர்வுகளை சொல்வதில் நீங்கள் சிறந்தவராக இருப்பீர்கள்.