ரூ. 499 கட்டணத்தில் உங்கள் அதிர்ஷ்ட எண்ணை தேர்ந்தெடுக்கும் வசதி! Jio அதிரடி

முகேஷ் அம்பானி தலைமையிலான ரிலையன்ஸ் Jio (Reliance Jio) நிறுவனமானது, Jio மொபைல் நம்பர்கள் தொடர்பான ஒரு புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது. அதென்ன வசதி? இதனால் Jio நம்பர்களுக்கு வரும் மாற்றம் என்ன? ரூ.499 கட்டணம் எதற்காக? இதோ விவரங்கள்; Jio நிறுவனமானது Jio Choice என்கிற புதிய வசதியை அறிமுகம் செய்துள்ளது, இதன் பெயர் குறிப்பிடுவது போலவே, இது அனைத்து Jio பயனர்களுக்குமான ஒரு வசதி அல்ல, இது யாருக்கெல்லாம் தேவையோ அவர்கள் மட்டும் இதை பயன்படுத்தி கொள்ளலாம்.

Jio சாய்ஸ் வசதியின் கீழ், உங்கள் மொபைல் நம்பரை நீங்களே தேர்வு செய்துகொள்ள முடியும். அதாவது உங்களுடைய புதிய Jio மொபைல் நம்பரில் உள்ள கடைசி 4 முதல் 6 இலக்கங்களை (Last 4 to 6 Digits) உங்கள் விருப்பப்படி நீங்களே தேர்வு செய்த கொள்ள முடியும். எடுத்துக்காட்டாக உங்கள் பிறந்தநாள் 6-9-1990 (1996 ஆம் ஆண்டு செப்டம்பர் 6) என்று வைத்துக்கொள்வோம். அதை உங்கள் Jio மொபைல் நம்பரில் சேர்க்க விரும்பினால், Jio சாய்ஸ் வசதியின் கீழ் உங்களுடைய மொபைல் நம்பரின் கடைசி 6 இலக்கங்களை 691990 ஆக தேர்வு செய்யமுடியும்.

பிறந்த தேதியை மட்டுமல்ல, உங்களுக்கு விருப்பமான எந்த இலக்கங்களையும் உங்களால் தேர்வு செய்ய முடியும். அது உங்களுடைய அதிர்ஷ்ட எண்ணாக இருக்கலாம் அல்லது எளிமையாக நினைவில் வைத்துக்கொள்ள கூடிய வரிசையான எண்களாக கூட இருக்கலாம், இப்படி எதை வேண்டுமானாலும் நீங்கள் தேர்வு செய்யலாம்.

இதை செய்ய Jioவின் அதிகாரப்பூர்வ வலைத்தளமான Jio.com செல்லவும். பின்னர் Self-care பிரிவிற்கு செல்லவும். இப்போது Jio இணையதளத்தில் கிடைக்கும் Choice Number என்ற பிரிவிற்குள் செல்லவும்.
மேலே சொன்ன வழிமுறைகள் குழப்பமாக இருந்தால், நேரடியாக இந்த இணைப்பிற்க்குள் https://www.jio.com/selfcare/choice-number/ செல்லவும். பிறகு உங்கள் புதிய ப்ரீபெய்டு அல்லது போஸ்ட்பெய்டு Jio மொபைல் எண்ணில் நீங்கள் விரும்பும் கடைசி 4 முதல் 6 இலக்கங்களை உள்ளிடவும். எளிதாக நினைவில் வைத்துக்கொள்ளக்கூடிய அல்லது உங்களுக்கு முக்கியத்தும் வாய்ந்த எண்களை தேர்ந்தெடுக்கலாம்.

இப்போது நீங்கள் கட்டணம் செலுத்தும் பிரிவுக்கு சென்று ரூ.499 செலுத்த வேண்டும். பணம் செலுத்திய பிறகு, உங்கள் புதிய Jio எண் 24 மணி நேரத்திற்குள் ஆக்டிவேட் செய்யப்படும். இதே செயல்முறைகளை உங்கள் மொபைலில் உள்ள MyJio ஆப் வழியாகவும் கூட செய்யலாம். மைJio ஆப்பிற்குள் நுழைந்து Search Barல் சாய்ஸ் நம்பர் என்று டைப் செய்யவும்.