இப்படி ஒரு நோக்கியா (NOKIA) போனுக்கு தான் பலரும் ஏங்கினோம் என்று கூறவைக்கும் படியாக, நோக்கியா பிராண்டட் மொபைல் போன்களை தயாரிக்கும் உரிமம் பெற்றுள்ள எச்எம்டி குளோபல் (HMD Global) நிறுவனமானது ஒரு புதிய ஸ்மார்ட்போனில் பணியாற்றி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
144 மெகாபிக்சல் மெயின் கேமரா, 7900 எம்ஏஎச் பேட்டரி, அல்ட்ரா ஃபாஸ்ட் 5ஜி வேகம் போன்ற முக்கிய அம்சங்களுடன் தயாராகும் இந்த புதிய நோக்கியா ஸ்மார்ட்போனின் மாடல் பெயர் என்ன? இது வேறு என்னென்ன அம்சங்களை உடையது? எப்போது அறிமுகமாகும்?
எச்எம்டி குளோபல் நிறுவனமானது Nokia Aurora Ultra 5G 2023 (Nokia Aurora Ultra 5G 2023) என்கிற ஆண்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் வேலை செய்வதாக கூறப்படுகிறது. இப்புதிய நோக்கியா ஸ்மார்ட்போனானது அதிநவீன தொழில்நுட்பம் மற்றும் விதிவிலக்கான செயல்திறனை வழங்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. புதிய அரோரா அல்ட்ரா 5ஜி ஆனது நேர்த்தியான மற்றும் ஸ்டைலான வடிவமைப்பை கொண்டிருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பெரும்பாலானோர்களின் கைக்குள் வசதியாக பொருந்தும்படி மெலிதான டிசனையும் கொண்டிருக்கும். இதில் இடம்பெறும் டிஸ்பிளேவானது அற்புதமான வியூவிங் எக்ஸ்பீரியன்ஸை வழங்கும் என்றும் கூறப்படுகிறது.
இதன் பெயர் குறிப்பிடுவது போலவே, இதுவொரு 5ஜி ஸ்மார்ட்போனாக இருக்கும். ஒப்பிடமுடியாத செயல்திறன், தடையற்ற Multi-tasking, மென்மையான App Navigation மற்றும் Lag-free Gaming வழங்குவதற்காக இதில் உயர் செயல்திறன் கொண்ட சிப்செட் பேக் செய்யப்படும்.
Nokia Aurora Ultra 5G 2023 ஆனது 144எம்பி கேமராவை கொண்டிருக்கலாம். இது நம்பமுடியாத தெளிவுடன் அற்புதமான மற்றும் விரிவான புகைப்படங்களை வழங்குமென்றும் கூறப்படுகிறது. மேலும் இதன் கேமரா செட்டப் ஆனது அற்புதமான Low-light Videoக்களை வழங்குமென்றும் கூறப்படுகிறது. வரவிருக்கும் Nokia Aurora Ultra 5G 2023 ஆனது ஒரு பெரிய 7900mAh பேட்டரியுடன் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது உண்மையாகும் பட்சத்தில், இது நம்ப முடியாத அளவிற்கு மிகவும் நீளமான பேட்டரி லைஃப்பை வழங்கும்; அடிக்கடி சார்ஜ் செய்ய வேண்டிய அவசியமே இல்லாமல் ப்ரவுஸிங், ஸ்ட்ரீமிங் மற்றும் மல்டி டாஸ்கிங்கை செய்ய உதவும்.
வரவிருக்கும் இந்த நோக்கியா போனில் உள்ள 5ஜி கனெக்டிவிட்டி ஆனது மின்னல் வேகமான பதிவிறக்கம் மற்றும் பதிவேற்ற வேகம், தடையற்ற ஸ்ட்ரீமிங் மற்றும் லேக்-ஃப்ரீ ஆன்லைன் கேமிங்கை உறுதி செய்யும் என்றும் கூறப்படுகிறது. ஒட்டுமொத்தமாக இது புதுமையான மற்றும் பலமான நோக்கியா ஸ்மார்ட்போனாக இருக்கும்.
தற்போது வரையிலாக Nokia Aurora Ultra 5G 2023 ஸ்மார்ட்போனின் அறிமுகம் மற்றும் விலை குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவல்களும் வெளியாகவில்லை. சிலர் இந்த மாடல் Nokia Magic Maxஆக இருக்காமல் என்றும் பரிந்துரைக்கின்றனர். அது உண்மையாகும் பட்சத்தில், அதாவது இரண்டுமே ஒரே மாடலாக இருக்கும் பட்சத்தில், இது ரூ.49,990 க்கு அறிமுகம் செய்யப்படலாம்.