குறைந்தளவு மின்சாரத்தை உபயோகித்து சுற்றுச்சூழலை பாதுகாப்போம்!

• வீட்டிலும், நீரை வெப்பமாக்குவதற்கும் சூரிய ஒளி சக்தியை உபயோகியுங்கள்.

• வீட்டை விட்டு கிளம்பும் வேளையில் அனைத்து மின் உபகரணங்களையும் நிறுத்துவதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள் .

• ஒருங்கிணைக்கப்பட்ட குளிர்பதன வசதி இருக்குமாயின், உபயோகிக்காத அறைகளில் உள்ள வென்டிலேட்டர்களை மூடாதீர்கள்.

• குறுகிய நேரத்திற்கு வெளியே சென்றாலும், தேவையற்ற இடங்களில் ஒளிரும் மின்விளக்குகளை அணைத்துவிடுங்கள்.

• உங்கள் குளிர்சாதனப்பெட்டியின் வெப்பநிலையை 36 முதல் 38 பாகையிலும், ஃப்ரீசர் வெப்பநிலையை 0 முதல் 5 பாகை வரையிலும் பேணுங்கள்.

• ஓவன் உபயோகிக்கும்போது அடிக்கடி அதன் கதவைத் திறப்பதை தவிருங்கள். உங்கள் ஓவனின் வெப்பநிலையை 25 முதல் 30 பாகை வரை குறைக்கும்.

• வேலை இல்லாத நேரத்தில் மின்விளக்குகள், கணினிகள் மற்றும் ஏனைய மின்சாதனப்பொருட்களை அணைத்து வையுங்கள்.

• கச்சிதமான ஃப்ளேரசன்ட் விளக்குகளை பயன்படுத்தி செலவையும், சக்தி விரயத்தையும் குறைத்துக்கொள்ளுங்கள்.

• வீட்டிற்கு நிழல் தரும் மரங்களை வளருங்கள். வாகனங்களில் பயணிப்பதையோ, விமானத்தில் பறப்பதையோ முடிந்தளவு குறைத்துக்கொள்ளுங்கள். வாகனங்கள் உற்பத்தி செய்யப்படும் போதும், அவற்றின இயங்கு நிலையிலும் அதிகளவு மாசுக்கள் வெளிப்படுவதுடன், அதிகளவு எரிசக்தியும் தேவைப்படுகின்றது. குறைந்தளவு வாகன உபயோகத்தை மேற்கொண்டு பூமியை பாதுகாத்துக்கொள்ளுங்கள்

குழுவாக காரில் அல்லது வேனில் ஒன்றிணைந்து செல்வதை, சைக்கிளில் அல்லது நடந்து செல்வதை கடைப்பிடியுங்கள். உங்கள் வாகனத்தை சரியான முறையில் பராமரியுங்கள். ரேடியல் டயர்களைக் கொள்ளளவு செய்வதுடன் சரியான அழுத்தத்தில் காற்றடையுங்கள். ஸ்ப்ரே பெயின்ட் அடிப்பதை தவிர்த்து ப்ரஷ் அல்லது ரோலர்கள் கொண்டு வர்ணம் பூசுங்கள். இதன் மூலம் காற்று மாசுபடுதலைக் கட்டுப்படுத்தலாம்.