வெயில் படத்தின் மூலம் இசையமைப்பாளராக தமிழில் அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். பின்னர் பல வெற்றி படங்களுக்கு இசையமைத்துள்ளார். கன்னடம், ஹிந்தி, மராத்திப் படங்களுக்கும் இசையமைத்துள்ளார். தற்போது பிஸியாக நடித்து வருகிறார். இருப்பினும் இசையமைப்பதை நிறுத்தவில்லை. இதையும் படிக்க: தலைவி ரிட்டர்ன்ஸ்: 11 வாரங்களுக்குப் பிறகு அமலா பால் பகிர்ந்த புகைப்படங்கள்! சூர்யா நடிப்பில் வெளியான சூரரைப் போற்று திரைப்படத்திற்காக தேசிய விருதும் வென்றுள்ளார் ஜி.வி.பிரகாஷ். தற்போது மீண்டும் சூர்யாவுடன் (சூர்யா 43) இணைய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தப் படத்தினை சுதா கொங்கரா இயக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. சூர்யாவின் பிறந்த நாளான ஜூலை 23ஆம் நாள் இந்தப் படம் குறித்து அறிவிப்பு வெளியாகுமென எதிர்பார்க்கப்படுகிறது.
நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜி.வி.100 விரைவில்” என ட்வீட் செய்துள்ளார். இவரது இசையில் நடிகை கங்கனா ரணாவத் இயக்கி நடித்துள்ள எமர்ஜென்சி திரைப்படம் நவ.24ஆம் தேதி வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.