நடிகர் கமல்ஹாசன் ‘இந்தியன் 2’ படத்தில் நடித்து வருகிறார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் ஹெச்.வினோத் மற்றும் மணிரத்னம் படங்களில் அடுத்தடுத்து நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், தெலுங்கு நடிகர் பிரபாஸ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகும் ‘புராஜக்ட் கே’ படத்தில் வில்லனாக நடிக்கவும் ஒப்பந்தமாகியுள்ளார்.
இந்நிலையில், வருகிற ஜூலை 21 ஆம் தேதி இப்படத்தின் கிளிம்ஸ் வீடியோவை அமெரிக்காவில் வெளியிட படக்குழு முடிவு செய்திருப்பதால் அதற்காக கமல்ஹாசன் அமெரிக்கா சென்றுள்ளார்.