விஜய் ஆண்டனியின் ‘கொலை’ படம் எப்படி இருக்கு?

பாலாஜி குமார் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரித்திகா சிங், மீனாட்சி சௌத்ரி, ராதிகா சரத்குமார், ஜான் விஜய், அர்ஜூன் சிதம்பரம், முரளி ஷர்மா, சித்தார்த் ஷங்கர் எனப் பலரும் நடித்துள்ள படம் ‘கொலை’. கிரீஷ் கோபால கிருஷ்ணன் இசை அமைத்துள்ளார். இன்பினிட்டி ஃபிலிம் வென்ச்சர்ஸ் மற்றும் லோட்டஸ் பிக்சர்ஸ் இணைந்து தயாரித்து பெரும் எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் ‘கொலை’ படத்தின் விமர்சனத்தை இங்கு காணலாம்.

1923ஆம் ஆண்டு நடைபெற்ற துப்பு துலங்காத ஒரு கொலையை அடிப்படையாகக் கொண்டு படம் எடுக்கப்படுள்ளதாக டைட்டில் கார்டில் சொல்லப்படுகிறது. டீசர், இரண்டு ட்ரெய்லர்களை பார்த்து ரசிகர்கள் சிலாகித்தது படத்தின் மேக்கிங்கில் தான். ஹாலிவுட் தரத்திலான அந்த மேக்கிங் தமிழ் சினிமாவுக்கே புதிதாகத் தோன்றுகிறது.

கதையின் ஓட்டம் காட்சிகள் நடப்பது சென்னையா, அல்லது வெளிநாடா என்னும் அளவுக்கு இருக்கிறது. ஆனால் குற்றவாளியை இவர் தான் என ரசிகர்கள் முடிவெடுக்காதபடி காட்சிகளை நகர்த்துவது சாமர்த்தியம் என்றால், குற்றவாளியைக் கண்டுபிடிக்கிறேன் என மெதுவான கோணத்தில் நகரும் விசாரணை திரைக்கதை பொறுமையை சோதிக்கிறது. சில லாஜிக் மீறல்களும் ‘அது எப்படி திமிங்கலம்?’ என்ற வசனமாகவே தோன்றுகிறது.

கிரீஷ் கோபால கிருஷ்ணனின் பின்னணி இசையும், சிவகுமார் விஜயனின் ஒளிப்பதிவும் அழகாக கைக்கொடுத்திருக்கிறது. பார்த்த நியாபகம் இல்லையோ பாடல் மட்டும் தான் கேட்கும்படி உள்ளது, மற்ற பாடல்கள் கதைக்காக வைக்கப்படிருந்தாலும் பொருந்திப் போகவில்லை. மொத்தத்தில் 10 ஆண்டு இடைவெளிக்குப் பின் பாலாஜி குமார் இயக்கியுள்ள கொலை படத்தை அதன் மேக்கிங்கிற்காக ஒரு டைம் தியேட்டரில் பார்க்கலாம்.