வேற வேலை மாறீட்டீங்களா? அப்போ EPFO அப்டேட் எப்படி செய்யலாம்னு பார்க்கலாம் வாங்க…

நிறுவனங்களில் பணிபுரியும் ஒவ்வொரு தனிநபரும் தங்களது சம்பளத்தின் ஒரு பகுதியை PF அக்கவுண்ட்டில் செலுத்துகிறார்கள். இந்த PF நிதியை ஊழியர்கள் தங்களுக்கான அவசர காலங்களில் பயன்படுத்தி கொள்ளலாம். இல்லை என்றால் ஊழியர்கள் தங்கள் பணியிலிருந்து முற்றிலும் ஓய்வு பெற்ற பிறகு அவர்களின் ஓய்வு காலத்தில் இந்த PF நிதியை பயன்படுத்தி கொள்ளலாம். தனியார் துறையில் அடிக்கடி வேலை மாறுபவர்கள் தங்களது EPF அக்கவுண்ட்டை வேலை மாறுதல்களுக்கு ஏற்ப அவ்வப்போது அப்டேட் செய்து வைத்திருப்பது மிக அவசியம். EPFO விதிகளின்படி, ஒரு ஊழியர் வேறொரு நிறுவனத்தில் சேருகிறார் என்றால், அவர் தனது முந்தைய அக்கவுண்ட்டில் இருந்தது தனது வருங்கால வைப்பு நிதியை மாற்றுவதற்கு, புதிய நிறுவனத்தின் கீழ் மெம்பராக என்ரோல் செய்து கொள்ள வேண்டும்.

நீங்கள் சமீபத்தில் வேலை மாறியிருந்தால் மற்றும் உங்கள் EPF அக்கவுண்ட்டில் வேலை மாறியதற்கான தேதியை அப்டேட் வேண்டும் என்றால், பின்பற்ற வேண்டிய எளிய செயல்முறை பற்றி இங்கே பார்க்கலாம்.
PF அக்கவுண்ட்டை ட்ரான்ஸ்ஃபர் செய்வது எப்படி?
EPFO விதிகளின்படி ஒரு பணியாளர் புதிய நிறுவனத்தில் வேலையில் சேரும் போது, அவர்கள் தங்கள் PF அக்கவுண்ட்டை பழைய நிறுவனத்திலிருந்து மாற்ற வேண்டும். ஏற்கனவே குறிப்பிட்டபடி தங்களது PF அக்கவுண்ட்டை மாற்றும் முன், புதிய நிறுவனத்தில் பணியாளராக தங்களை பதிவு செய்து கொள்வது அவசியம். அப்போதுதான் தங்கள் EPF அக்கவுண்ட்டை புதிய நிறுவனத்திற்கு மாற்ற முடியும். புதிய நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த 2 மாதங்களுக்குள் ஒருவர் தனது PF அக்கவுண்ட்டில் date of exit-ஐ அப்டேட் செய்ய வேண்டும்.
இந்நிலையில் EPFO தனது சமீபத்திய ட்விட் ஒன்றில் “ஊழியர்கள் இப்போது தாங்களாகவே Date of Exit-ஐ அப்டேட் செய்யலாம். இந்த செயல்முறையைப் பற்றி மேலும் அறிய, இந்த வீடியோவைப் பார்க்கவும். உங்கள் #DateofExit-ஐ அப்டேட் செய்ய இந்த எளிய வழிமுறைகளை பின்பற்றவும்” என்று கேப்ஷன் கொடுத்து வீடியோ ஒன்றை ஷேர் செய்துள்ளது.
இங்கே Date of Exit என்பது முன்னர் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து விலகிய தேதி ஆகும். முன்பெல்லாம் ஊழியர்கள் வேலையிலிருந்து விலகிய நிறுவனமோ அல்லது EPFO அலுவலகத்துக்கு நேரடியாக சென்று உரிய சான்றுகளை சமர்பித்தோ தான் ஒரு நிறுவனத்தில் இருந்து விலகிய தேதியை அப்டேட் செய்ய வேண்டிய சூழல் இருந்தது. ஆனால் இந்த நடைமுறையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ள EPFO, ஆன்லைன் மூலம் ஊழியர்கள் தாங்களாவே முன் பணியாற்றிய நிறுவனத்தில் இருந்து விலகிய தேதியை அப்டேட் செய்து கொள்ள வழிவகை செய்துள்ளது. அதற்கான வழிமுறைகளை கீழே காணலாம்.
– முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface என்ற வெப்சைட்டை ஓபன் செய்து கொள்ள வேண்டும்.
– உங்களது UAN நம்பர் மற்றும் பாஸ்வேர்ட்-ஐ பயன்படுத்தி Login செய்து கொள்ள வேண்டும்.
– Manage என்ற டேப்-ஐ கிளிக் செய்து Mark Exit என்ற ஆப்ஷனை செலக்ட் செய்து கொள்ள வேண்டும்.
– பின்னர் காட்டப்படும் லிஸ்ட்டில் இருந்து PF அக்கவுண்ட் நம்பரை தேர்வு செய்யவும்.
– பிறகு நீங்கள் வேலை பார்த்த முந்தைய நிறுவனத்தை விட்டு வெளியேறிய தேதியை தேர்ந்தெடுக்கவும்.
– உங்கள் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட மொபைல் நம்பரில் OTP-ஐ பெற “Send OTP” என்பதை கிளிக் செய்து, வந்திருக்கும் OTP-ஐ என்டர் செய்ய வேண்டும்.
– இறுதியாக அப்டேட் ஆப்ஷனை செலக்ட் செய்து Date of Exit-ஐ உறுதிப்படுத்த கிளிக் செய்யவும்.