ரோஜா குல்கந்து சாப்பிட்டால் ஜீரண மண்டலம் சீராகுமா..?

குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்குமே இருக்கும் ஒரு முக்கியமான பிரச்சனை ரோஜா குல்கந்து.இந்த மலச்சிக்கல் பிரச்சனைக்கு ரோஜா குல்கந்து சாப்பிட்டு வர நல்ல பலன் கிடைக்கும்.
மலச்சிக்கல் இருக்கும் போது வெந்நீரில் குல்கந்தை கலந்து குடித்து வந்தால் மலம் இளகி மலச்சிக்கல் குறையும்.

தினமும் இரவில் இதை சாப்பிட வேண்டும். கர்ப்பிணிகளும் மலச்சிக்கல் இருக்கும் போதும் வயிறு சம்பந்தமான பிரச்சனை உண்டாகும் போதும் வெந்நீருடன் இதை சாப்பிட்டு வரலாம். வயிற்றில் ஏற்படும் பிரச்சனைகளான வாயு தொல்லை, வயிற்றுப்புண், செரிமானக்கோளாறுகள் என அனைத்தையும் போக்க ரோஜா குல்கந்து உதவும். இது காரத்தன்மை கொண்டுள்ளதால் வயிற்றில் இருக்கும் செரிமானத்துக்கு உதவும் அமிலங்களின் சமநிலையை சீர் செய்கிறது.

வயிறு மந்தமாக இருக்கும் போது குழந்தைகள் சாப்பிட அடம்பிடிப்பார்கள். அவர்களுக்கு காலை வேளையில் ஒரு டீஸ்பூன் அளவு ரோஜா குல்கந்து கொடுத்துவந்தால் செரிமானக்கோளாறுகள் சீராகி பசியின்மை பிரச்சனை நீங்கும். நன்றாக பசி எடுத்து குழந்தைகள் சாப்பிட செய்வார்கள். பெரியவர்கள் ஜீரண கோளாறுகளை கொண்டிருந்தால் அவர்களும் தொடர்ந்து 21 நாட்கள் இதை சாப்பிட்டால் ஜீரண மண்டலம் சீராக செயல்படும்.

பித்தம் போக்கும் குணமுடையது:

பித்தம் பிரட்டலோடு இருக்கும் போது அதை போக்க ரோஜா குல்கந்து உதவும். பித்தம் அதிகமாகும் போது கிறுகிறுப்பு, வாந்தி, குமட்டல் உணர்வு போன்றவை உண்டாக கூடும். இதற்கு ரோஜா இதழ்களை கொதிக்க வைத்து ருசிக்கு நாட்டு சர்க்கரை சேர்த்து இரண்டு வேளை குடித்துவந்தால் பித்தம் நீங்கும். அதற்கு மாற்றாக ரோஜா குல்கந்தையும் எடுத்துகொள்ளலாம். இது பித்த பிரட்டலை குறைக்க செய்யும்.

ரோஜா குல்கந்து ஆண்மை பெருக்கி என்றும் அழைக்கப்படுகிறது. ஆண்களின் உடலுக்கு வலிமை கிடைக்க இவை உதவுகிறது. இரவில் பாலில் குல்கந்து கலக்கி கொடுத்தால் விந்தணுக்கள் எண்ணிக்கை குறையாமல் இருக்கும் . வீரியம் அதிகமாக இருக்கும். ஆண்மை குறைபாடு உண்டாகாது. பெண்களுக்கு வெள்ளைப்படுதல், மாதவிடாய் கால வயிறு வலி போன்ற உபாதைகளை குறைக்கவும் இது உதவுகிறது.

துவர்ப்பு சுவை ரோஜா குல்கந்து கொண்டுள்ளதால் ரத்த குழாய்களுக்கும் இதயத்துக்கும் கல்லீரலுக்கும் நன்மை செய்கிறது. இது உடலுக்கு குளிர்ச்சியை தருவதால் மன அழுத்தத்தை போக்கும் நல்ல மருந்தாகவும் செயல்படுகிறது. தூக்கம் வராமல் அவதி படுபவர்கள் பாலில் ஒரு டீஸ்பூன் அளவு ரோஜா குல்கந்து கலந்து சாப்பிட்டு வந்தால் நன்றாக தூக்கம் வரும். ரோஜா குல்கந்து சாப்பிடுவதால் இது சருமத்தில் சுருக்கங்களை அண்டவிடாமல் சரும பளபளப்பை அதிகரிக்கும். இவ்வளவு பலன்களை கொண்ட ரோஜா குல்கந்து நீங்களும் வாங்கி சாப்பிட்டு பாருங்கள். உங்கள் ஆரோக்கியத்தை அதிகப்படுத்தி கொள்ளுங்கள்.