12-ம் வகுப்பு துணைத் தேர்வு எழுதிய மாணவர்கள் விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு ஜூலை 27, 28 ஆகிய தேதிகளில் விண்ணப்பிக்கலாம். 12ம் வகுப்பு மாணவ-மாணவிகளுக்கான துணைத்தேர்வு ஜூன் 19-ம் தேதி முதல் 26-ம் தேதி வரையில் நடைபெற்றது. அதன் முடிவுகள் மதிப்பெண் பட்டியலாக நேற்று www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியானது. தேர்வர்கள் தங்களின் மதிப்பெண் சான்றிதழ்களை தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம்.
விடைத்தாள் நகல் மற்றும் மறு கூட்டலுக்கு விண்ணப்பிக்க விரும்பும் மாணவர்கள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசுத் தேர்வுகள் உதவி இயக்குனர் அலுவலகத்திற்கு 27 மற்றும் 28-ம் தேதிகளில் நேரில் சென்று உரிய கட்டணத்தை செலுத்தி பதிவு செய்துக் கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.