"மணற்கேணி செயலி" மூலம் பள்ளி பாடங்களை இனி வீடியோவாக பார்க்கலாம்!

தமிழகத்தில் பள்ளிக்கல்வியை மேம்படுத்தும் நோக்கில் அரசு எண்ணும் எழுத்தும், நான் முதல்வன், இல்லம் தேடி கல்வி உள்ளிட்ட எண்ணற்ற திட்டங்களை அறிமுகப்படுத்தி வருகிறது. அந்த வகையில் தற்போது நாட்டிலேயே முதன் முறையாக காணொலி வாயிலாக பாடங்களை கற்பிக்கும் மணற்கேணி என்ற செயலியை தமிழக அரசு அறிமுகப்படுத்தியுள்ளது.

கற்றல் – கற்பித்தலை சுவாரசியமாக மாற்றும் முயற்சியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கல்வித்துறை விளக்கம் அளித்துள்ளது. வல்லுநர்கள் உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இச்செயலி வாயிலாக 1ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்களுக்கு விளக்கப் பாடங்களை உருவாக்கி எளிமையாக கற்பிக்கலாம்.

மேலும் இச்செயலி மாநில கல்வி திட்டத்தின் கீழ் பயிலும் மாணவர்களுக்கு பாடங்களை 27000 வகை பிரித்து விளக்க படங்களை உருவாக்கி அளிக்கிறது. இதன் மூலம் சுமார் 25 லட்சம் மாணவர்கள் பயன் பெறுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.