இந்திய பங்குச்சந்தையில் குவியும் வெளிநாட்டு நிறுவன முதலீடுகள்!

இந்திய பங்குச்சந்தையானது இன்று உயர்வுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளது. பங்குச்சந்தை நிலவரம் (27/07/2023):

இந்திய பங்குச்சந்தையானது இன்று ஏற்றத்துடன் வர்த்தகமாகி வருவது முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சி அளித்துள்ளது. தற்போதைய வர்த்தக நிலவரப்படி, மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான சென்செக்ஸ் 3.20 புள்ளிகள் உயர்ந்து 66,692 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது. தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண்ணான நிஃப்டி 8.55 புள்ளிகள் உயர்ந்து 19,786 புள்ளிகளுடன் வர்த்தகமாகி வருகிறது.
உயர்வுக்கான காரணம் என்ன?

அமெரிக்க ஃபெடரல் வங்கி கடந்த 22 ஆண்டுகளில் இல்லாத வகையில் வட்டி விகிதத்தை உயர்த்தியுள்ளது. தற்போது வட்டி விகிதம் 25 அடிப்படை புள்ளிகள் உயர்த்தப்பட்டு 5.25 சதவீதத்தில் இருந்து 5.50 சதவீதமாக கூடியுள்ளது. மேலும், ஃபெடரல் வங்கி ஜெரோம் பவல் மேலும் வட்டி உயர்வுக்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகக் கூறியது, அமெரிக்க பணவீக்கம் குறித்த கவலையை அதிகரித்துள்ளது.
இதனால் வெளிநாட்டு நிறுவன முதலீட்டாளர்களின் கவனம் இந்திய பங்குச்சந்தை பக்கம் திரும்பியுள்ளது. இதற்கு முதலாம் காலாண்டு நிதி அறிக்கையில் இந்திய நிறுவனங்கள் பலவும் லாபத்தை பதிவு செய்து வருவதும் முக்கியக் காரணமாக அமைந்துள்ளது.

ஏற்றம் கண்ட பங்குகள்:

எல்&டி

சிப்லா

ஐடிசி

ரிட்டானியா

சன் பார்மா

பவர் கிரிட்

இன்ஃபோசிஸ்

க்சிஸ் பேங்க்

இறக்கம் கண்ட பங்குகள்:

பஜாஜ் ஃபைனான்ஸ்

பஜாஜ் ஃபின்சர்வ்

எம்&எம்

அப்பல்லோ ஹாஸ்பிட்டல்ஸ்

டெக் மஹிந்திரா

இந்திய ரூபாயின் மதிப்பு

அமெரிக்க டாலருக்கு எதிரான ரூபாயின் மதிப்பு 10 காசுகள் உயர்ந்து 81.91 ஆக உள்ளது.