சர்க்கரை வள்ளி கிழங்கு பொதுவாக குறிப்பிட்ட காலத்திற்கு மட்டுமே கிடைக்கும். இந்நிலையில் இதில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் தன்மை உள்ளது. மேலும் வைட்டமின் ஏ சத்து கொண்டது.
குறிப்பாக தொற்று அல்லது காய்ச்சல் வரும் காலத்தில் இதை சாப்பிடுவது சிறந்ததாக இருக்கும்.
இதில் ஆண்டி ஆக்ஸிடண்ட் உள்ளது. மேலும் 100 கிராம் சர்க்கரை வள்ளி கிழங்கில் உள்ள நன்மைகளை தெரிந்துகொள்வோம்.
கலோரிகள்: 86, கொழுப்பு சத்து: 0.1 கிராம், சோடியம் : 55 மில்லிகிராம், பொட்டாஷியம்: 337 மில்லிகிராம், கார்போஹைட்ரேட்: 20 கிராம், நார்சத்து: 3 கிராம், சர்க்கரை : 4.2 கிராம், புரத சத்து: 1.6 கிராம், வைட்டமின் சி, கால்சியம், இரும்பு சத்து, வைட்டமின் பி6 உள்ளது.
கல்லீரல் ஆரோக்கியம்:
கல்லிரலில் சிக்கல் இருப்பவர்களுக்கு இது சாப்பிடுவது நல்லது. இதில் உள்ள ஆண்டி ஆக்ஸிடண்ட் கல்லீரலை சுத்திகரிக்கும். வீக்கத்தை குறைக்கும். ஒரு சர்க்கரை வள்ளிக்கிழங்கு சாப்பிட்டல், 400% வைட்டமின் ஏ தேவையை பூர்த்தி செய்யும். இது நமது கண் பார்வையை பலப்படுத்தும். நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும் இதயம் மற்றும் சிறுநீரகத்தின் வேலையை சீரகாச் செய்யும். இனப்பெருக்க மண்டலத்தை ஆக்கப்பூர்வமாக செயலாற்ற உதவும்.
இதில் உள்ள பீட்டா கெரோட்டினி, ஆண்டி ஆக்ஸிடண்ட் புற்றுநோய் பாதித்தவர்களுக்கு சிகிச்சையின்போது உதவும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் இதில் சர்க்கரை மற்றும் கார்போஹைட்ரேட் அளவு அதிகமாக உள்ளது. இருப்பினும் சாதாரண உருளைக்கிழங்கை விட இதில் கிளைசிமிக் இண்டக்ஸ் மிகவும் குறைவு என்பதால் சர்க்கரை நோயாளிகள் இதை எடுத்துக்கொள்ளலாம்.
மேலும் இதில் உள்ள வைட்டமின் ஏ சத்து, கர்ப்பிணி பெண்களுக்கு உதவியாக இருக்கும். இது குழந்தையின் வளர்ச்சிக்கு உதவியாக இருக்கும். கர்ப்பிணி பெண்களுக்கு ஏற்படும் ஜீரண பிரச்சனைகளை , இதில் உள்ள நார்சத்து குறைக்க உதவும்.