"என் மண் என் மக்கள்" யாத்திரை!இராமேஸ்வரத்தில் இன்று தொடங்கி வைக்கிறார் அமித் ஷா!

தமிழ்நாடு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை மேற்கொள்ளும் ‘என் மண் என் மக்கள்’ யாத்திரையை தொடங்கி வைப்பதற்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா 2 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். இன்று மாலை 4 மணிக்கு டெல்லியிலிருந்து தனி விமானம் மூலம் மதுரை விமான நிலையம் வரும் அமித்ஷா ஹெலிகாப்டர் மூலம் மண்டபம் சென்றடைகிறார். பின்னர் அங்கிருந்து சாலை மார்க்கமாக இராமேஸ்வரம் சொல்கிறார்.மாலை 5.45 மணிக்கு இராமேஸ்வரத்தில் நடைபெறும் ‘என் மண் என் மக்கள் யாத்திரை’ தொடக்க விழாவில் அமித்ஷா பங்கேற்கிறார்

பொதுக்கூட்டத்தில் அமித்ஷாவுடன் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி தலைவர் ஜி.கே.வாசன், புதிய தமிழகம் கட்சி தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவர் ஜான் பாண்டியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

அமித்ஷா இரவு 8.30 மணிக்கு முக்கிய தலைவர்களுடன் ஆலோசனை செய்கிறார்.நாளை காலை 5.45 மணிக்கு அமித்ஷா இராமேஸ்வரம் இராமநாதசுவாமி கோயிலில் சாமி தரிசனம் செய்கிறார் காலை 11 மணிக்கு இராமேஸ்வரத்தில் உள்ள தனியார் விடுதியில் Memories Never Die என்னும் அப்துல் கலாம் தொடர்பான புத்தகத்தை வெளியிடுகிறார். நண்பகல் 12 மணிக்கு அப்துல் கலாம் நினைவிடத்திற்கு செல்கிறார் அமித் ஷா. அதனைத்தொடர்நது (12.45) அமித்ஷா விவேகானந்தர் நினைவு இல்லத்திற்கு செல்கிறார்.

நாளை 1.20 மணிக்கு அமித்ஷா மண்டபத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் மதுரைக்கு புறப்படுகிறார். பின்னர் 2,10 மணியளவில் விமானம் மூலம் டெல்லி செல்கிறார். மத்திய அமைச்சர் அமித் ஷா வருகையையொட்டி ராமேஸ்வரத்தில் கூடுதல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.