முன்பதிவு செய்யப்பட்ட ரயில் டிக்கெட்டில் பெயரை மாற்றுவது எப்படி?

இந்திய ரயில்வே தனது பயணிகளுக்கு பல வசதிகளை வழங்குகிறது, இது பற்றி சிலருக்கு மட்டுமே தெரியும். அத்தகைய விதிகளில் ஒன்று டிக்கெட் பரிமாற்றம் ஆகும். நீங்கள் விரும்பினால், உங்களின் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டை வேறொருவரின் பெயருக்கு மாற்றலாம். ஆம், டிக்கெட் பரிமாற்ற வசதியை ரயில்வே வழங்குகிறது. அதாவது, மற்றவர்களின் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டில் எளிதாகப் பயணம் செய்யலாம்.

பயணச்சீட்டை மாற்றும் முறையை விளக்கிய ரயில்வே, மக்கள் தங்கள் குடும்ப உறுப்பினர்களின் பெயரில் டிக்கெட்டை மாற்றிக் கொள்ளலாம் என்று கூறியுள்ளது. உங்களிடம் உறுதி செய்யப்பட்ட டிக்கெட்டுகள் இருந்து உங்களால் பயணம் செய்ய முடியாவிட்டால், அந்த டிக்கெட்டை உங்கள் குடும்ப உறுப்பினரின் பெயருக்கு மாற்றலாம். அதாவது உறுதிசெய்யப்பட்ட பயணச்சீட்டில் உங்கள் குடும்ப உறுப்பினரைப் பயணிக்கச் செய்யலாம்!

டிக்கெட்டில் பயணிகளின் பெயரை மாற்றுவது எப்படி?
நீங்கள் கவுண்டரில் டிக்கெட் வாங்கியிருந்தாலும் அல்லது ஆன்லைனில் முன்பதிவு செய்திருந்தாலும், பெயரை மாற்ற நீங்கள் கவுண்டருக்குச் செல்ல வேண்டும். இதற்காக, டிக்கெட்டின் பிரிண்ட் அவுட் மற்றும் நீங்கள் யாருடைய பெயருக்கு மாற்றம் செய்ய விரும்புகிறீர்களோ, அந்த நபரின் அடையாள அட்டையை புகைப்பட நகலுடன் கவுண்டருக்கு எடுத்துச் செல்ல வேண்டும். இதற்குப் பிறகு டிக்கெட்டில் பெயர் மாற்றப்படும்.

இந்த வசதி காத்திருப்போர் பட்டியல் அல்லது RAC-ல் கிடைக்காது
IRCTC பயணிகள் தங்கள் டிக்கெட்டில் பயணிகளின் பெயரை மாற்றுவதற்கான வசதியை வழங்குகிறது. இருப்பினும், இந்த மாற்றத்தை ஒரு டிக்கெட்டில் ஒரு முறை மட்டுமே செய்ய முடியும். மிக முக்கியமான விஷயம் என்னவென்றால், உங்கள் டிக்கெட் உறுதியாகியிருக்க வேண்டும். வெயிட்டிங் லிஸ்ட் அல்லது RAC டிக்கெட்டுகளை மாற்ற முடியாது.

24 மணி நேரத்திற்கு முன் பெயரை மாற்றலாம்
பயணச்சீட்டில் பயணிகளின் பெயரை மாற்ற வேண்டுமானால், சில விதிகளையும் கவனிக்க வேண்டும். ரயில் புறப்படுவதற்கு 24 மணி நேரத்திற்கு முன்பு மட்டுமே பயணிகளின் பெயரை முன்பதிவு கவுண்டரில் மாற்ற முடியும் என்பதை நினைவில் கொள்ளவும். அதன் பிறகு இந்த வசதி முடக்கப்படும். உங்கள் உறுதிப்படுத்தப்பட்ட டிக்கெட்டில் பெற்றோர், உடன் பிறந்தவர்கள், மகன், மகள், கணவன் மற்றும் மனைவி ஆகியோரின் பெயர்களை மட்டுமே மாற்ற முடியும்.

போர்டிங் நிலையத்தையும் மாற்றலாம்
இது தவிர, IRCTC இணையதளத்தில் போர்டிங் ஸ்டேஷனையும் மாற்றலாம். இதைச் செய்ய, ஐஆர்சிடிசி இணையதளத்திற்குச் சென்று உங்கள் கணக்கில் உள்நுழைய வேண்டும். பின்னர் நீங்கள் உங்கள் போர்டிங் ஸ்டேஷனின் பெயரை மாற்றலாம். ஆஃப்லைன் முறையில் (முன்பதிவு கவுண்டர்) டிக்கெட் முன்பதிவு செய்யப்பட்டால், போர்டிங் ஸ்டேஷனின் பெயரை மாற்ற இந்திய ரயில்வே அனுமதிக்காது.