டிபன்ஸ் காரிடர் துறையில் கோவை சிறந்து விளங்குகிறது என ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி டெவலப்மென்ட் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு தலைவர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். 300 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள அனைத்து டெண்டர்களையும் சிறுகுறு தொழில்களுக்கு கிடைக்க இந்திய அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. டிபன்ஸ் காரிடத்துறையில் கோவை சிறந்து விளங்குகிறது என ஏரோஸ்பேஸ் இண்டஸ்ட்ரி டெவலப்மென்ட் அசோசியேஷன் ஆஃப் தமிழ்நாடு தலைவர் ராமச்சந்திரன் பேட்டி அளித்தார்.
கோவை சரவணம்பட்டி பகுதியில் உள்ள தனியார் குமரகுரு தொழில்நுட்பக் கல்லூரியில் கோயம்புத்தூர் (‘defence conclave 2023′) என்ற சிறப்பு கருத்தரங்கம் இன்று நடைபெற்றது. இதில் ஏரோஸ்பேஸ் மற்றும் டிபன்ஸ் ஃபார் இண்டஸ்ட்ரீஸ் அண்ட் அகாடமி என்ற தலைப்பு முன்வைக்கப்பட்டு ஏரோஸ்பேஸ் மற்றும் டிபன்ஸ் துறைகளில் உள்ள தொழில் முதலீடுகள் மற்றும் தொழில் சார்ந்த பங்களிப்பு போன்றவை குறித்து விவாதிக்கப்பட்டது.
இது குறித்து சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட ஏரோப்ளேன் இண்டஸ்ட்ரி டெவலப் மென்ட் அசோசியேசன் ஆப் தமிழ்நாடு தலைவர் ராமச்சந்திரன் கூறுகையில், தமிழ்நாட்டில் (‘defans’) காரிடர் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. உங்கள் அனைவருக்கும் தெரியும் இதன்மூலம் எப்படி தொழில் துறையை உத்தியோகப்படுத்தி முன்னுக்கு கொண்டு வருவது என முயற்சி செய்து வருகிறோம் தமிழ்நாடு அரசாங்கத்திலிருந்து தமிழ்நாடு போன்றவைகள் எல்லாம் மிகவும் உதவிகரமாக உள்ளன. இதை ஆரம்பித்த பிறகு தமிழகத்தில் 5000 கோடி ரூபாய் முதலீடு வந்துள்ளது.
மேலும் இன்னும் அதிக முதலீடு வரவேண்டும் எனவும் தமிழ்நாடு அரசு கேட்டுக் கொண்டுள்ளது.
எப்படி பெரிய நிறுவனங்களை கொண்டு வருவது என கோவை தற்போது முன்னணியில் உள்ளது இங்கு அட்டல் இன்னேஷன் சென்டர் உள்ளது அது மிகவும் உதவிகரமாகவும் இங்கே டிட்கோ ஏரோஸ்பேஸ் பார்க் ஏற்படுத்த உள்ளனர் இப்போது டிசன்ஸ் மார்க்கெட் முன்னேற்றம் அடைந்து காணப்படுகிறது. குறிப்பாக 300 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள சிறு குறு தொழிலுக்கு கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளனர்.
200 கோடி ரூபாய்க்கு கீழ் உள்ள டெண்டர்களை உலக அளவில் அல்லாமல் இந்தியாவிற்குள் தான் வாங்க வேண்டும் என சட்டம் போட்டுள்ளனர். சிறுகுறு தொழிலுக்கு வருவதற்காக இந்திய அரசு பல ஏற்பாடுகளை செய்து வைத்துள்ளனர். கோவைக்கு பிட்கோ டாட்டா 100 கோடி ரூபாய் அளவிற்கு ஒரு சென்டருக்கும் அமைய உள்ளது கோவை இந்த துறையில் நல்ல ஒரு வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது எனவே இன்ஜினியரிங் சார்ந்த தொழில் அதிக அளவில் இருப்பதால் இதுவும் அவர்களுக்கு உதவிகரமாக இருக்கும் என இவ்வாறு தெரிவித்தார்.