ஆன்மீகப் பயணம் போகணுமா? IRCTC அசத்தல் அறிவிப்பு.!!!

ஆன்மீகப் பயணம் போகணுமா? IRCTC அசத்தல் அறிவிப்பு.!!! இந்தியாவில் பல பிரசித்தி பெற்ற புண்ணிய ஸ்தலங்கள் உள்ள நிலையில் பல மாநிலங்களை சேர்ந்த மக்கள் பலரும் அங்கு பார்வையிட செல்கின்றனர்.
இதனால் இந்தியன் ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் ஆன IRCTC உத்தர் பாரத் தர்ஷன் ட்ரிப்பின் ஒரு பகுதியாக பல முக்கியமான மத தலங்களை பார்ப்பதற்கு சிறப்பு ரயிலை அறிமுகம் செய்துள்ளது. இதன் மூலமாக ஆன்மீக இடங்களுக்கு செல்ல விரும்பும் பயணிகள் எளிதில் செல்ல முடியும். அதே சமயம் ஸ்பெஷல் பாரத் கௌரவ் எக்ஸ்பிரஸ் IRCTC புனித யாத்திரைக்கான இடங்களை இணைக்கும் வகையில் அறிமுகம் செய்துள்ளது. பயணிகளின் வசதிக்காக இந்த ரயில் டிக்கெட்டில் 33 சதவீதம் தள்ளுபடி வழங்கப்படுகிறது.

பாரத் கவுரவ் ரயில் ஹரித்வார், ரிஷிகேஷ், வைஷ்ணவி தேவி கோவில், அமிர்தசரஸ், மதுரா மற்றும் பிருந்தாவனம் மற்றும் அயோத்தி போன்ற இடங்களுக்கு பயணிகளை அழைத்துச் செல்லும். இந்த ரயில் ஆகஸ்ட் 11ஆம் தேதி கொல்கத்தாவில் இருந்து புறப்பட்டு பயணம் 10 இரவுகள் மற்றும் 11 பாடல்களை கொண்டதாக இருக்கும் எனவும் இந்த ரேப்பர் கிளாஸ் இன் பயணிக்க ஒரு நபருக்கு 17 ஆயிரத்து 700 ரூபாய் கட்டணமும், மூன்றாம் ஏசி கொண்ட ஸ்டாண்டர்ட் கிளாஸ் இன் பயணிப்பதற்கு ஒரு நபருக்கு 27 ஆயிரத்து நானூறு ரூபாய் கட்டணமும், மூன்று ஏசி கொண்ட கம்போர்ட் கிளாஸில் பயணிப்பதற்கு ஒரு நபருக்கு 30 ஆயிரத்து 300 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது