பொதுவாக அதிகளவு கொலஸ்ட்ரால் பிரச்சனை என்பது பரம்பரையாககூட வரவாய்ப்புள்ளது. ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையால்தான் இது அமைகிறது. ஆரோக்கிய உணவு , வழக்கமான உடற்பயிற்சி மற்றும் சில நேரங்களில் மருந்துகள் போன்றவை உடலில் உள்ள அதிக கொழுப்புகளை குறைக்க உதவி செய்கிறது . இந்த பதிவில் கொழுப்பை எப்படி கரைக்கலாம் என்று பார்க்கலாம்.
1. சில குழந்தைகள் உடலில் அதிகமாக உள்ள கொலஸ்ட்ரால் இருக்கும். இது இரத்த நாளங்களின் சுவர்களில் அடைப்பை உருவாக்க காரணமாக அமைகிறது.
2. இதனால் இதயத்திற்கு செல்லும் இரத்த ஓட்டம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனால் இதய ஆரோக்கியம் மோசமடைகிறது.
3. இந்த கொழுப்பை குறைக்க உதவும் உணவுகளை உண்ண வேண்டியது அவசியம்.
4. அதில் முக்கியமானது “கொள்ளு”. அடிக்கடி கொள்ளு சாப்பிட்டால், உடல் எடையானது கணிசமாக குறையும்.
5. கொலஸ்ட்ரால் இரத்தத்தில் இருப்பது எந்தவித அறிகுறிகளையும் வெளியில் காட்டாது.
6. ஆகவே பெற்றோராகிய நீங்கள் குழந்தைக்கு அடிக்கடி இரத்தப்பரிசோதனை செய்து பார்த்துக் கொண்டால்தான் கொலஸ்ட்ரால் அதிகளவில் இருப்பதை அறிந்துகொள்ள முடியும்.:
7. கொலஸ்ட்ராலை குறைக்க ஜங்க்புட் எனப்படும் எண்ணெயில் வறுத்த மற்றும் பொறித்த உணவுகளை குழந்தைகளுக்கு கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
8. கொலஸ்ட்ராலை குறைக்க அதிகளவு இனிப்பு பானங்கள் மற்றும் சோடாக்கள் போன்றவற்றை தவிர்க்க வேண்டும்.
9.இனிப்பு பொருட்கள் மற்றும் கேக் போன்ற உணவுகளில் அதிககொழுப்பு மற்றும் கலோரிகள்உள்ளது
10. இவை குழந்தைகள் உடலில் கொலஸ்ட்ரால் அளவை அதிகரித்து விடுகிறது.