வருமான வரி கணக்கு தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள்!!

2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 20223 ஆம் ஆண்டு நிதியாண்டு வருமானத்திற்கு செலுத்த வேண்டிய வரி கணக்கை தாக்கல் செய்வதற்கு இன்றுடன் கால அவகாசத்தை மத்திய அரசு வழங்கி இருந்தது. கடந்த நிதியாண்டுகளில் வருமான வரி கணக்கை தாக்கல் செய்தவர்களுக்கு மின்னஞ்சல், குறுஞ்செய்தி மூலமாக மத்திய அரசு நினைவூட்டல்களை ஏற்படுத்தி வந்த நிலையில், வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

வருமான வரி கணக்கை தாக்கல் செய்துள்ளவர்கள் நேற்று மாலை வரை சுமார் 6 கோடி பேர் என்று மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலை 31ம் தேதி வரை தாக்கல் செய்யப்பட்ட கணக்குகளின் எண்ணிக்கையை விட இது அதிகம் என்று கூறப்படுகிறது. நேற்று மட்டும் 26.76 லட்சம் பேர் வருமான வரி கணக்கு தாக்கல் செய்துள்ளனர். இந்நிலையில் 2022-23 நிதியாண்டுக்கான வருமான வரி கணக்குகளை தாக்கல் செய்ய இன்றே கடைசி நாள் என்பதால் உடனடியாக வரிக்கணக்கைத் தாக்கல் செய்யாதவர்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.